ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் லீக் முறையிலான காலிறுதிப் போட்டியின் இன்றைய போட்டியில் மானிப்பாய் ரெட் ரேஞ்சர்ஸ் (Manipay Red Rangers) விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகம் மோதியது.
இப்போட்டியில் மானிப்பாய் ரெட் ரேஞ்சர்ஸ் 3:0 எனற கோல் கணக்கில் வல்வை விளையாட்டுக் கழகத்தை வெற்றிகொண்டது.
இப்போட்டியானது உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில்( 06.10.2013) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
லீக் சுற்றின் அடுத்த போட்டியில் எதிர்வரும் 14ம் திகதி பாசையூர் பாடுமீன் அணியை எதிர்கொள்கிறது..இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறவேண்டிய நிலையில் வல்வை அணி உள்ளது…..