வல்வை இளங்கதிர் வி.கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட இன்றைய சுற்றில் சைனிங்ஸ் வெற்றி.

வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (03-12-2013)மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இன்று மாலை 16.30 மணியளவில் நடைபெற்ற போட்டியில் வல்வை உதயசூரியன் கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் பெறாததால் தண்ட உதை மூலம் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

நாளை மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் அரையிறுதியாட்டங்கள் நடைபெறவுள்ளது.

1-DSC_0666 2-DSC_0667 3-DSC_0668 4-DSC_0669 6-DSC_0671 7-DSC_0672 8-DSC_0673 9-DSC_0670

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *