வல்வை விளையாட்டுப் பெருவிழாவின் கரப்பந்தாட்டத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை நேதாஜி கைப்பற்றியது
வல்வை விளையாட்டுக்கழகத்தின் பெருவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டஇ வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்கள் நேற்று வல்வை பொது விளையாட்டரங்கில் (Fudsal ground) நடைபெற்றன.
அரையிறுதிக்கு தகுதியான வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகமும் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
இரண்டாவதாக நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகமும் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகமும் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில்வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி, வல்வை விளையாட்டுக்கழகத்தின் பெருவிளையாட்டு 2014 ஆம் ஆண்டிற்கான கரப்பந்தாட்ட வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.























































