வாடி ஒழுங்கை,வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சுந்தர் நகர் திருச்சியை வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி சுந்தரமூர்த்தி தெய்வானைப்பிள்ளை (சின்னக்கிளி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
தோற்றம் 23/05/1925 மறைவு 27/05/2013
சோதிமுத்து பெற்றெடுத்த சொக்கத் தங்கமே!
ஐயா சுந்தரமூர்த்தி கைப்பிடித்த சந்திர வதனமே!
கோடி மாரி கால்பதித்த வாடி மண்ணின் மூத்தவளே!
கோமகளே! நீ போனதனால் எங்கள்
வாடி ஒழுங்கையும் இன்று வாடி விட்டதே!
.
ஏழு வர்ணம் நீ வரைந்தாய் உன் வயிற்றில்
வானவில்லாய் நாம் பிறந்தோம் வல்வை மண்ணில்
ராஜநாமம் சூட்டி வைத்தாய் ஏழு பேருக்கும்
ராஜயோகம் தேடி வந்தது கால நேரத்தில்
சொத்து சுகம் சேர்த்து வைத்தோமம்மா
பத்திரமாய் உனைக் காக்க
இப்போ சித்தம் கலங்கிப் போனதம்மா
உத்தமி நீ இல்லையென்று
அம்மா நீ இல்லை என்றால், அத்தனையும்
சும்மா என்று தோன்றுதம்மா
எங்களுக்குச் சுட்டு விரல் சுண்ணாம்பும்
சொந்தமில்லை என்று ஆனதம்மா.
இருள் மேகம் எமைச் சூழ்ந்து
அடி வானம் இருண்டதம்மா, இன்று
ஒளியூட்டி வழிகாட்ட எங்களுக்கு
விடி வெள்ளியாய் வந்திடம்மா
உன் பிரிவால் தவிக்கும் பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,சொந்தங்கள்
தகவல்:பிள்ளைகள்
சு.ராஜரெத்தினம்(நோஸ்)-இந்தோனேசியா
சு.ராமச்சந்திரன்(பூமாலை)வல்வெட்டித்துறை-0094217914707
சு.ராஜகுமார் (ஜீவன்)-லண்டன் -02086409688
சு.ராஜசிங்கம்(ராஜம்மான்)-லண்டன் -07983600913
முகவரி: 8a ஆசாத் நகர்,திருச்சி,தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி:00914312-455754