Search

Landmark குழுமத்தை நடாத்தி செல்லும் ஓர் இயக்குனராக வல்வையை சேர்ந்த திருமதி. ஜெகன்மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

“பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!”
பாரதி பாடிச் சென்று சகாப்தங்கள் ஓடிய போதும்.. இன்னும் பெண் முன்னேற்றம் போராட்டத்திற்குரிய விடயமாகவே உள்ளது. அப்படி இருக்கையில் ஐக்கிய ராஜ்ஜிய வர்த்தக உலகை நம் ஈழத்து தமிழச்சி ஒருத்தி கலக்கிக் கொண்டு இருக்கிறார் என்றால் நமக்கெல்லாம் பெருமை தானே.. அவர் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட விஜயராஜா ராதாஜெயலட்சுமி தம்பதிகளின் புதல்வி திருமதி. ஷர்மிளா ஜெகன்மோகன் ஆவார். இவர் South Croydon பகுதியில் தன் கணவர் திரு. விஜயகுமார் ஜெகன்மோகன், குழந்தைகள் மயூரி அபிராமி மற்றும் விஷ்ணு விக்னேஷ் உடன் வசித்து வருகிறார்.ஆண்டுக்கு பல மில்லியன் பவுண்ஸ் வியாபாரம் ஈட்டும் ஹைலைன் நிறுவனத்தை லண்டன் மாநகரில் நடத்திவருகிறார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் மொத்த வியாபாரிகளின் கூட்டுறவுச் சங்கங்களில் மிக முக்கியமானவை இரண்டு.. Landmark wholesale மற்றும் Today’s Group. இதில் கடந்த 5 ஆண்டுகளாக Landmark குழுமத்தில் அங்கத்தவராக ஹைலைன் நிறுவனம் உள்ளது. இந்த மாதம் 2ம் திகதி நடந்த அவர்களின் தேர்தலில் Landmark குழுமத்தை நடாத்தி செல்லும் ஓர் இயக்குனராக திருமதி. ஜெகன்மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்களின் 45 ஆண்டு கால வரலாற்றில் இந்தப் பதவியில் அமரும் 2வது பெண்.. ஆங்கிலேயர் அல்லாத முதலாவது பெண் இயக்குனர் இவரே.. இதில் Today’s Groupல் ஒரு பெண் இயக்குனர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்து பெண் ஒருத்தி ஐக்கிய ராஜ்ஜியத்தின் வியாபர அரங்கில் ஓர் முக்கிய இடம் வகிப்பது நம் அனைவருக்கும் பெருமையே.

வியாபாரத்துடன் நிறுத்தாமல் திருமதி. ஷர்மிளா ஜெகன்மோகனின் பணி அவர் வாழும் சமூகத்திலும் பரவிக்கிடக்குது. Croydonல் உள்ள முதியோர் பாதுகாப்பு நிலையத்தின் தலைவராக இருந்து நடாத்திச் செல்கிறார். 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் குற்றம் புரிந்து சட்டத்தின் கீழ் வந்தால் அவர்களை சீர் திருத்தி நல்வழிப்படுத்தும் Restorative Justice Boardல் பணியாற்றி பல இளையோரின் வாழ்க்கையை சீரமைத்துக்கொண்டிருக்கிறார். 18 வயதிற்கு கீழ்பட்டோர் அல்லது புத்தி சுவாதீனம் குறைந்த பெரியோர் காவல்துறைக்கு கொண்டு செல்லப்படும் பட்சத்தில் அவர்களின் குடும்ப அங்கத்தவர் அவர்களுடன் வராவிடின் அவர்களை பாதுகாத்து சட்ட நடவடிக்கைகளில் துணை நிற்கும் Appropriate Adult என்ற தொண்டுப் பணியையும் ஆற்றுகின்றார். வசதி வாய்ப்பற்ற குடும்பங்களில் பிறந்து பிந்தங்கிய பாடசாலைகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு Mentor ஆக இருந்து அவர்களின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கிறார். இன்னும் பல உதவிகளை கேட்கும் அனைவருக்கும் செய்யும் இலகிய மனம் படைத்தவர். வரும் அனைவருக்கும் இலவச சட்ட ஆலோசணைகளை வழங்கி முன்னின்று அவர்களின் பிரச்சிணைகளை தீர்த்து வைக்கிறார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை. Twitter மற்றும் Facebookல் ஆயிரக்கணக்கானோர் பின் தொடரும் எழுத்தாளர். அதி நுண்ணறிவு கொண்டோர்க்கான MENSA அமைப்பின் அங்கத்தவர். Chartered Institute of Legal Executive என்ற சட்ட வல்லுனர் அமைப்பின் அங்கத்தவர். இப்படி இவர் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் இவர் மகள் செல்வி. மயூரி ஜெகன்மோகனும் MENSA அங்கத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சிறுமி நுண்ண்றிவு சோதணைகளில் 162 மதிப்பெண்கள் பெற்று விஞ்ஞானி ஐன்ஸ்டைனுக்கு நிகரான மூளை கொண்டவள் என்று அறிவிக்கப்பட்டாள்.

திருமதி. ஜெகன்மோகனை தொடர்பு கொண்டு கருத்து கேட்ட போது… “எல்லாப் புகழும் என் அப்பா விஜயராஜாவையே சாரும். என் ஒவ்வொரு அடியும் அவர் செதுக்கியதே” என்கிறார். இந்த மகளை ஈன்றதற்கு என்ன தவம் செய்தாரோ அந்தத் தந்தை.

புலம்பெயர் நாட்டில் தமிழரின் புகழ் பரப்பும் பாரதி கண்ட புதுமை பெண்ணிற்கு எங்கள் வாழ்த்துக்கள்..

https://www.asiantrader.biz/landmark-appoints-non-white-female-to-board/Leave a Reply

Your email address will not be published.