விறுவிறுப்பு மிக்க ஆட்டம் ……
வென்றது யங்கம்பன்ஸ்……
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று(25.03.2015) நடைபெற்றன.முதலாவது அரையிறுதி போட்டியில் நாவாந்துறை சென் மேரிஸ் அணியை எதிர்த்து ஆடிய கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி வெற்றி பெற்றது…. இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்கவில்லை, ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எந்த வித கோல்களையும் பெறவில்லை, பின்னர் தண்ட உதை மூலம் வெற்றி தீர்மனிகப்பட ஆரபித்தது, தண்ட உதையிலும் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியது, இறுதியில் 7:6 என்ற கோல்கணக்கில் யங்கம்பன்ஸ் வெற்றிபெற்றது…
சென் அன்டனிஸ் அணி 4:1 என்ற கோல்கணக்கில் வெற்றி……
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று(25.03.2015) நடைபெற்றன. இரண்டாவது அரையிறுதி போட்டியில் நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து ஆடிய பாசையூர் சென் அன்டனிஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதி… ஆட்டத்தின் இடைவேளை வரையில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது, அடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட எந்த அணியும் கோல் போடவில்லை,இடைவேளையின் பின்னர் 2 வது நிமிடத்தில் அன்டனிஸ் வீரன் கலிஸ்டன் கோல் போட்டு தமது அணியை முன்னிலைபடுத்த தொடர்ந்து 13,20 வது நிமிடங்களில் அன்டனிஸ் அணி வீரன் கஜானன் இரு கோல்களை பெற்று கொடுத்தார்.பின்னர் கலைமதி நட்சத்திரம் சத்தியசிலன் 23 வது நிமிடத்தில் கோல் போட்டார், 24 வது நிமிடத்தில் அன்டனிஸ் வீரன் கலிஸ்டன் மிண்டும் ஒரு கோல் போட 4:1 என்ற கோல் கணக்கில் அன்டனிஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது…