வல்வை புளூஸ் வி.கழகத்தின் 25வது வருட நிறைவை முன்னிட்டு நேற்று (25.05.2015) நடாத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முழுமையான படத்தொகுப்பு பகுதி- 1
வல்வை புளூஸ் வி.கழகத்தின் 25வது வருட நிறைவை முன்னிட்டு நேற்று (25.05.2015) நடாத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு சுந்தரலிங்கம் இந்திரலிங்கம் (முரளி) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு சுரேஸ் கிருஷ்ணா (லண்டன் பாபா) அவர்களும் வருகை தந்து போட்டியை சிறப்பித்தனர்.
விழாவின் ஆரம்ப வைபவமாகிய விளக்கேற்றலை இரண்டாம் லெப்டினன் இசைப்பிரியாவின் தாயார் திருமதி ஆறுமுகதேவன் மகாலெட்சுமி அவர்களும் தொடர்ந்து திருமதி சசிகலா சுரேஸ், திருமதி ரேச்சல் நந்தகோபன், திருமதி மங்கையக்கரசி இந்திரலிங்கம் ஆகியோர் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து பிரித்தானியா கொடியினை திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் ,தேசிய கொடியினை திரு உருத்திராபதி சேகர் அவர்களும் ( கப்டன் வாசு, மேஜர் ஜேம்ஸ், கப்டன் சுந்தரி அவர்களின் சகோதரர்), வல்வை புளூஸ் கொடியினை திரு சுந்தரலிங்கம் இந்திரலிங்கம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.






































































































































































