Search

வல்வையைச் சேர்ந்த தாயும் மகனும் கராத்தே சுற்றுப் போட்டியில் முதலிடம்

பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தினால் (Institute of Martial Arts, Point Pedro),04.10.2015 ஆம் திகதி தும்பளையில் அமைந்துள்ள தற்காப்புக் கலையக மண்டபத்தில் சிகான் பொனி ரொபேர்ட் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கராத்தேப் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாயும் மகனும் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் பங்கு பற்றிய திருமதி முரளி மாலதி காட்டா போட்டியில் முதலிடத்தையும், 7 வயதுப் பிரிவில் பங்கு பற்றிய திரு.முரளி மகனான பரிதியனும் முதலிடத்தைப் பெற்றனர்.




Leave a Reply

Your email address will not be published.