வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் 04.10.2015 இரத்ததான முகாம், பெண்கள் உட்பட 45 கொடையாளிகள் குருதி வழங்கினர்
04.10.2015) வல்வெட்டித்துறையில் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் பெண்கள் உட்பட 45 கொடையாளிகள் குருதிக் கொடை வழங்கியிருந்தனர்.
இரத்ததான முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்பெற்றது.
Valvettithurai.ORG யின் பிரதான அனுசரனையுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் மேற்பார்வையின் கீழ் இன்றைய இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.































































