கேப்டன் வேல்ஸ் என்று அழைக்கப்படும் பிரிட்டிஸ் இளவரசா் ஹாரி நான்கு மாதகாலாமாக ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி போர் ஹெலிகாப்ட்டர் பைலட்டாக பயிற்சி பெற்றார்.
பயிற்சி முடிந்து திரும்பிய போது அவரை பத்திரிக்கையாளர்கள் பேட்டியெடுத்தனர். அப்போது ஹாரியிடம் “நீங்கள் எதிராளிகளை சுட்டுக்கொன்றீர்களா என்று கேட்டனர்?” அதற்கு அவர் ஆம் ,பலரின் வாழ்கையைக் காப்பாற்றவே சிலரின் உயிரை பறிக்கவேண்டிய நிலை ராணுவ வீரா்களுக்கு ஏற்படுகிறது என்றார்.
மீண்டும் அவரிடம் 40 மில்லியன் பவுண்டு விலையுள்ள போர் விமானத்தின் காக்பிட்டில் (விமானி அறை)இருந்து கீழே குறிபார்த்து சுட்டீா்களா? என்று கேட்டனர். அதற்கு அவர் துணை விமானி என்ற முறையில் நானும் ஒரு சில கலவரக்காரா்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் படி நேரிட்டது என்றார்.
இவரது பணியைப் பார்த்து இளவரசா் வில்லியம் பாரட்டியாதாகவும், இவர் தொடர்ந்து ஏழு மணிநேரம் ராணுவப்பணி செய்ய நேர்ந்த போது களைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் சிப்ரஸ் தீவில் உள்ள ராணுவத்தளத்துக்குப் போய் சில நாட்கள் இருந்து விட்டுப் பின்பு தாயகம் திரும்பப் போவதாகவும் தெரிவித்தார்.