தாயக செய்திகள்

விடுதலைப் போராளிகளுக்கான இரண்டரை கோடி ரூபாய் வாழ்வாதார உதவி வழங்கல்.

விடுதலைப் போராளிகளுக்கான இரண்டரை கோடி ரூபாய் வாழ்வாதார உதவி வழங்கல்.
வட மாகாண கிராமிய அபிவிருத்தி, மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, வீதி அபிவிருத்தி அமச்சின் நிதி ஒதுக்கீட்டில், வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களில் தலா ஐம்பது இலட்சங்கள் வீதம் இரண்டரை கோடி ரூபாய் தொழில் மேம்பாட்டுக்கான உதவி வழங்கும் திட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தொழில் மேம்பாட்டிற்காக உதவிகள் 21.10.2016 வெள்ளிக்கிழமை இன்று வழங்கப்பட்டது.
யோ.புரட்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வட மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் பெலீசியன், வடமாகாண உறுப்பினர்கள் து.இரவிகரன், சிவனேசன், முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வில்வராஜா, முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் திருமதி பவாணி, முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மாலினி பாஸ்கரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் யோகஸ், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆயோரும் கலந்து கொண்டனர்.
காசோலைகள், மற்றும் தொழில்சார் உபகரணங்கள் என்பன இன்று வழங்கிவைக்கப்பட்டது.
இன்று காலை கிளிநொச்சியில் இவ்வுதவிகள் வழங்கப்பட்டதோடு, மாலை வவுனியாவிலும் இவ்வுதவிகள் வழங்கப்படும். இவ்வாரம் பிற மாவட்டங்களிலும் வழங்கப்படும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *