தென் ஆப்ரிக்காவில் வடக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இதையெல்லாம் விட அங்குள்ள ஒரு முதலைப் பண்ணையில் இருந்து 15 ஆயிரம் முதலைகள் தப்பி ஓடியது பெரும் பிரச்சினையாக கருதப்படுகிறது.
அந்த முதலைப்பண்ணை ராக்வேனா என்ற இடத்தில் உள்ளது. இங்கு மழை வெள்ளம் புகுந்ததை தொடர்ந்து அவற்றின் கதவுகள் திறக்கப்பட்டன.
அதை பயன்படுத்தி முதலைகள் பண்ணையை விட்டு மழை வெள்ளத்துடன் வெளியேறி விட்டன. தற்போது அவை பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. எனவே அவற்றை பிடிக்கும்படி பணி நடைபெற்று வருகிறது.