வல்வையில் மர நடுகையை முன்னெடுக்கும் முன்னாள் பிரஜைகள் குழுவினர்
கடந்த பல வருடங்களாக வரட்சியை எதிர்நோக்கியுள்ள வல்வெட்டித்துறையைச் சோலை வனமாக்கும் திட்டத்தின் கீழ் முன்னாள் பிரஜைகள் குழுவின் தலைவர் திரு.ச.செல்வேந்திரா அவர்களின் தலைமையில் கடந்த இரு வருடங்களாக மர நடுகைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.அதற்கமைய பெருமளவு நிதிச் செலவில் வல்வெட்டித்துறையில் உள்ள ஆலயங்களின் வீதிகள்இ சந்தைஇ சனசமுக நிலையப் பகுதிகள்; போன்ற பிரதேசங்களில் மரங்கள் நடப்பட்டு இன்று அவை பெரு விருட்சங்களாகக் காட்சி அளிக்கின்றன.அதேபோன்று முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணக் கல்விச் செயலா ளரும், உள்ளுராட்சி உதவி ஆணையாளருமாக இருந்து தற்போது ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியு மாகக் கடமை ஆற்றும் திரு.சுந்தரம் டிகலாலா தலைமையில் ஆறுதல் குழுவினர் முன்பள்ளிகளில் மரநடுகைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தற்போது நிலவியுள்ள சூழ்நிலையில் புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள வல்வெட்டித்துறை சூழல் பாதுகாப்புக் கழகத்தினரும் (Valvettiturai Environmental Protection Club) வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினரும் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களும் இப்பணியில் ஒன்றாக இணைந்து வல்வெட்டித்துறை நகர சபை எல்லைப் பிரதேசங்களை மரங்கள் நிறைந்த சோலை வனமாக மாற்றுவதற்கு முன்வருமாறும் முன்னாள் பிரஜைகள் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.