வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு 15.04.2017 தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
நேற்று மாலை சுமார் 04.00 மணிக்கு வல்வை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.மு.பிரேம்குமார் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு.ஆ.மு. சிவாஜிலிங்கமும் சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் திரு.கணேஸ்வரன் வேலாயுதமும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
தீருவில் மைதானம் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் வல்வையில் இடம்பெறுள்ள 7 கழகங்களான இளங்கதிர் ரெயின்போ நேதாஜி சைனிங்ஸ் ரேவடி உதயசூரியன் மற்றும் தீருவில் ஆகிய கழகங்கள் பங்குபற்றியிருந்தன