இலங்கையில் யுத்தம் தொடர்பில் இராணுவத்தினர் நடாத்திய விசாரணைக ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடாத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்பட்டார்களா என்பது பற்றி இராணுவ நீதிமன்றம் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்பித்துள்ளது.
எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மக்கள் இந்த அறிக்கையில் நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் மற்றும் காவல்துறையினரின் நேர்மை தன்மை குறித்து அரசாங்கம் உறுதி வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கமோ இராணுவமோ விசாரணை நடாத்துவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் சமூகத்தினரின் பங்களிப்புடன் கூடிய பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடாத்துவது குறித்து இலங்கை அராங்கம் போதிய கரிசனை காட்டத் தவறியுள்ளதாக நவநீதம்பிள்ளை வருத்தம் வெளியிட்டுள்ளார்.