பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது

பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது
பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆண்டில் சுமார் இரண்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா, இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது.பிரித்தானிய அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுத் தளத்திலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.மனித உரிமை நிலைமைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வரும் இலங்கைக்கு பாரியளவில் ஆயுதங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
தனிப்பட்ட ரீதியில் அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் ஆயுத விற்பனை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், ஆயுத விற்பனையின் போது மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கவனத்திற் கொண்டே பிரித்தானிய அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.