பிரித்தானிய வல்வை நலன் புரிச்சங்கத்தின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில்
பிரித்தானிய வல்வை நலன் புரிச்சங்கத்தின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில்
தாயகத்திலே வறுமையை எதிர்கொண்டு கல்வியை கற்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் முகமாக
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 52 மாணவர்களுக்கான ரூபா 60000 பெறுமதியிலான பாதணிகள் வழங்கும் வைபவம்
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியா வாழ் வல்வை மக்களின் சார்பில் நடைபெற்றது.
இதனை வல்வையை சேர்ந்தவரும் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியருமான “ஆசிரியர் நிமலரூபன் ” முன் நின்று நடத்தி வைத்தார். அவருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த வருடம் மேலும் இவ்வாறான பல செயற்பாடுகளை தொடர்ந்த செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளோம் என்பதனையும் இங்கு குறிப்பிடவிரும்புகின்றோம்.
ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்த்தியான பின்னர் விபரங்கள் உங்களுக்கு அறியத்தரப்படும்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் வல்வை மக்களாகிய நீங்களும் பங்கெடுக்க விரும்பினால் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
நன்றி.
வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா.




















