கணணி நூலகம் திறப்பு விழா.
யா/ வல்வை றோ.க.த.க பாடசாலையில் கடந்த 36 வருடங்கள் ஆசிரியையாக பணியாற்றிய நெடியகாட்டைச்சேர்ந்த திருமதி மேரி நிர்மலா அர்ச்சுனா அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் அவரது சகோதரனும் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவனுமாகிய நெடியகாட்டை சேர்ந்த சூசைப்பிள்ளை விக்ரர் தனிநாயகம் அவர்களினால் குறித்த பாடசாலைக்கு 10 கணணிகள் அன்பளிப்பாக வழங்கி கணணி நூலகம் இன்று (19.05.2017) காலை 10:00 மணிக்கு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது