வல்வை செய்திகள்

வல்வை நலன்புரி சங்க கணித போட்டியாளர்கள் மற்றும் CWN11+ நிர்வாகிகளுக்கு…

வல்வை நலன்புரி சங்க கணித போட்டியாளர்கள்  மற்றும் CWN11+ நிர்வாகிகளுக்கு…
நான் சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவனாக மட்டுமல்ல வல்வையை  சேர்ந்தவன் என்ற ரீதியிலும் தங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். அந்த வகையிலேயே  தயவு செய்து அதனை தமது எதிர் கால நடவெடிக்கைகளின் போது  நன்மையை பயக்கும் என நினைத்தாள் நீங்கள் கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையோடு  கேட்டு கொள்கிறேன்..நான் யார் சார்பாகவும் தங்களிடம் இவ்விடம் கருதுவதாக எண்ணுவதாக இருப்பின் தயவு செய்து  இதற்கு  கீழ் செல்ல என்ன வேண்டாம்.
நீங்கள் தற்போது செய்கின்ற கணித போட்டி தொடர்பாக  என்னுடைய கருத்தினை தங்கள் இரண்டு அமைப்புகளுக்கும் கூறி கொள்ள நினைக்கிறேன்..
” என்னும் எழுத்தும் கண்ணென்பர்” என தமிழ் மூதாட்டி  கூறியதையும் நான்  அறிவேன்.ஆனால் கணிதம் மட்டும் வாழ்க்கையை தீர்மானிப்பது கிடையாது..ஒரு மாணவன் கணிதம்  பயின்றால் மற்ற  படங்களையும் இலகுவில் கல்வி கற்பான் என்பதயும் நான் அறிவேன். கணிதம் ஆங்கிலம் தொழில்நுட்பம் என பல பாடங்கள் தேவையாக உள்ளது. வல்வை மாணவர்களில் பல மாணவச்செல்வங்கள் இன்றும் தனது தாய்மொழியில் எழுத தெரியாதவர்களும் மூன்றாம் வாய்ப்பாடு தெரியாதவர்களும் இருக்கிறார்கள். அது யார் பிழை என்பதும் என் விவாதம் அல்ல..
கணித அறிவினை வளர்ப்பதில் வல்வை மண்ணில் கணித போட்டி பரீட்சசைகள் வைத்து அதன் மூலம் வல்வை மாணவ சமூகம்  கல்வியில் வளர்ச்சி அடையும் என்று எதிர் பார்க்காதீர்கள் . அது உங்களின் தவறான எண்ணத்தால்  நடந்தவையாக மாறவும் விடாதீர்கள்..
மூன்றாம் வாய்ப்பாடு தெரியாத ஒருவருக்கு கணிதத்தில் போட்டி வைப்பதால் என்ன நன்மை கிடைக்கும்..எழுதவே தெரியாத  ஒரு மாணவன் எப்படி சரியான  முறையில்  கணித போட்டியில் வெற்றி கொள்ள முடியும்.?
இப்படி போட்டிகளை வைப்பதனால் நம் வல்வை மாணவ செல்வங்கள்  அடையும் நன்மை என்ன,?
அவ்வாறு போட்டிகளின் மூலம் நீங்கள் பெற்று கொண்ட பணத்தினால் லட்ச கணக்கில் பரிசளிப்பு செய்வதிலும் பயனேதும் உண்டோ.?
இதுவே என்னிடம் காணப்படும் கேள்வி.
நாமெல்லாம் ஊரில் பிறந்தவர்கள் ஊரில் கல்வி கற்றவர்கள்  நாம் ஊருக்காக கட்டாயம் ஏதும் செய்தே ஆக வேண்டும் எனவே  செய்கின்ற விடயங்கள் தொடர்பில் மார்பு தட்டுவது பொருத்தமாகாத  விடையம்.
போட்டி பரீட்சசை வையுங்கள் ஆனால் அவர்களை அதற்காக தயார் செய்யுங்கள்..வெறுமனே அது போட்டிக்காக மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கையும் கொண்டு செல்ல கூடியதாகவும் பாடசாலை  பரீட்சயை அண்டியதாகவும்  இருக்க வேண்டும்..
கணிதம்  மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கு தரம் 1 தொடக்கம் 11 வரை எமது ஜந்து பாடசாலைகளிலும்(சிதம்பரா கல்லூரி ,சிவகுரு வித்தியாசாலை ,ரோமன் கத்தோலிக்கம், அமெரிக்க மிஷன்,மகளீர் கல்லூரி) வகுப்புகளை நடாத்துங்கள் அது கடினமென்றால் வல்வெட்டித்துறையில் பொதுவான இடம் ஒன்றில் வகுப்புகளை ஆரம்பியுங்கள்..அதன் மூலம் தொடர்சியாக வகுப்புகள்  ,வழிகாட்டி பரீட்சசை போன்றவற்றினை நடாத்துங்கள் .முதலில் அது பொருத்தமில்லாதது போல இருந்தாலும் காலம் சரியான வெளியீட்டினை  வழங்கும் .. அதுவே நம் ஊர் மாணவர்களை நீங்கள் அறிவான பாதையினை நோக்கி நகர்த்துவதற்கான முதல் படியாகவும் இருக்கும்.இது தங்கள் இரு அமைப்புகளிடமும் ஊர் மாணவர்கள் சார்பாக அநபாக கேட்டு கொள்கிறேன்..
            அத்துடன் வல்வையின்  பொதுவான நோக்கம் கருதி செயற்படும் இரு அமைப்புகளும்  தங்களிடம் காணப்படும் கருத்து வேறுபாடுகளை மறந்து தயவு செய்து  பாடசாலை இலச்சினையை  தங்கள் இரண்டு அமைப்புகளின் இலட்சனைகளில்  பயன்டபடுத்துவதில்  காணப்படும்  பிரச்சனையை சடட பிரச்சனைக்குள் செல்லாது  ஒற்றுமையாக  தங்களிடையே சுமூகமாக  தீர்த்து கொள்ளுங்கள்.ஏனெனில் இரு அமைப்புகளும்  போது நோக்கம் கருதி செயற்படுகிண்றீர்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு  நான் கூறுகின்றேன்
“சொல்வது நம்  கடமை கருத்தில்கொள்வது   உங்கள் விருப்பம்.”
இதை சொல்வதற்கு இவன் யார்  என்ற கேள்வி தங்கள்  மனதில் வருமாயின் தங்களின் நேரத்தினை வீணாகியமைக்கு மனவருத்தம் தெரிவித்து கொள்ளுகின்றேன்
அன்புடன் மயூரன்

குறிப்பு

நல்ல நோக்கத்துடன் உங்கள் கருத்து அமைத்துள்ளதை வரவேற்பதுடன் ஊரின் தேவையினை தெளிவு படுத்தியமைக்கு நன்றி மயூரன்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *