இந்தியா உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகின்றன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில், 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
மொத்தம் 19 வகையான விளையாட்டு போட்டிகளில் 275 பதக்கங்களை வெல்ல, ஆயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர். காமன்வெல்த் பதக்கங்களைக் கைப்பற்றுவதில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் தான் முன்னிலை வகித்து வருகின்றன. ஆயினும் இந்த ஆண்டு இந்தியாவும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பி.வி.சிந்து ,சாக்சி மாலிக், மேரிகோம், சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் உள்பட முன்னணி வீரர்-வீராங்கனைகள் 219 பேர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் ஜோடி சேர்வதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்க உள்ளன. அணிவகுப்பின்போது, இந்திய அணிக்கு பி.வி. சிந்து தலைமை தாங்கி கொடியேந்தி வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CommonWealth விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று தொடக்கம் added by admin on
View all posts by admin →