வல்வை வி க உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக்கழகம்
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில்இன்றைய தினம் (06 /03/2020) இடம்பெற்ற ஆட்டத்தில் இளவாலை சென்லூட்ஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வலைப்பாடு ஜெகமீட்பர் அணியானது மோதியது..விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத இவ்வாட்டத்தில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணியானது 02:01 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.
ஆட்டநாயகனாக வலைப்பாடு ஜெகமீட்பர் அணியைச்சேர்ந்த ஜெனிஸ்ரன் தெரிவுசெய்யப்பட்டார்