அபாரவெற்றியுடன் கரப்பந்தாட்ட கிண்ணத்தை தனதாக்கியது வல்வை வி.க மகளிர் அணி
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது இடம்பெற்றது.. அந்தவகையில் அரையிறுதியாட்டத்தில் நக்கீரன் அணியினை எதிர்கொண்ட வல்வை அணியானது 25:00,25:06 என்ற செற்கணக்கில் அபார வெற்றியினை பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற இறுதியாட்டத்தில் பருத்தித்துறை தீபஜோதி அணியினை எதிர்கொண்ட வல்வை பெண்கள் அணியானது அந்த போட்டியிலும் எவ்வித சிரமமும் இன்றி 25:06,25:08 என்ற செற்கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கியது.










