வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது ஏழாலை பைவ்ஸ்டார் விளையாட்டுக்கழகம்
வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது ஏழாலை பைவ்ஸ்டார் விளையாட்டுக்கழகம்
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது…
அந்தவகையில்இன்றைய தினம் (11/03/2020) இடம்பெற்ற ஆட்டத்தில் ஏழாலை பைவ்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கரணவாய்,மத்தி அணியானது மோதியது.
விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத இவ்வாட்டமானது ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாமல் சமனிலையடைந்தது.எனவே வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் ஏழாலை பைவ்ஸ்டார் அணியானது05:04 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெதிவாகியது.
ஆட்டநாயகனாக ஏழாலை பைவ்ஸ்டார் அணியின் சஜீவன் தெரிவுசெய்யப்பட்டார்.
நாளைய போட்டிகள்( 12/03/2020)
3 மணிக்கு
பாசையூர் சென் அன்ரனிஸ்
Vs
கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்
4 மணிக்கு
அல்வாய் மனோகரா
Vs
சிவானந்தா











































