வல்வை சித்திரவேல் கலையரசியின் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவில் இருந்து எம்மையும் எம்சுழலையும் பாதுகாப்போம். கவிதை தொகுப்பு
கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவில் இருந்து எம்மையும் எம்சுழலையும் பாதுகாப்போம்.
உலகை மிரட்டும் கொரோனாவின்
உயிரை பிடுங்கி எறிந்திடுவோம்.
உயிர் பிரிந்த உறவுகளுக்கு
ஒரு நிமிட அஞ்சலி செலுத்திடுவோம்.
நம்மை நோய் தாக்கிடாமல்
நாமே நோயை தவிர்த்திடுவோம்….
சுத்தம் ஒன்றை பேணி நாம்
சுழலினைக் காத்திடுவோம்.
காக்கும் வழி நாமறிந்து
கருத்தில் கொண்டு செயற்படுவோம்
கைகுழுக்கி அணைக்காமல்
இரு கைகூப்பி அரவணைப்போம்.
ஒன்றுகூடலை தவிர்த்து நாம்
ஒழித்திடுவோம் நோய்தனை
ஒவ்வொரு மணிக்கு ஒருமுறை
ஒழுங்காய் கையை கழுவிடுவோம்.
தும்மும் போதும் இருமும் போதும்
துணியைக்கொண்டு மறைத்திடுவோம்.
மற்றவருக்கு நம் நோயை
தொற்றிடாமல் காத்திடுவோம்.
தேவையற்ற பயணங்களை
முடிந்தவரை தவிர்த்திடுவோம்
தேவையான உணவுண்டு
தேகத்தினை தேற்றிடுவோம்.
நோயின் அறிகுறி தென்பட்டால்
நொடியில் ஆஸ்பத்திரி சென்றிடுவோம்
கொடிய நோயை விலக்கிடவே
நொடியில் வைத்தியர் செயற்படுவார்….
அச்சம் என்ற ஒன்றை நாம்
அறவே என்றும் மறந்திடுவோம்
நிச்சயம் இவ்வழி பின்பற்றி
நீண்ட ஆயுள் பெற்றிடுவோம்.
சித்திரவேல் கலையரசி
சிதம்பர வடக்கு
வல்வெட்டித்துறை









