நீண்ட கால காத்திருப்பு.. பிரகதீஸ்வரன் சகலதுறையிலும் ஜொலிக்க 2022 ஆம் ஆண்டில் முதல் கிண்ணத்தை சுவீகரித்தது வல்வை அணி…
நீண்ட கால காத்திருப்பு.. பிரகதீஸ்வரன் சகலதுறையிலும் ஜொலிக்க 2022 ஆம் ஆண்டில் முதல் கிண்ணத்தை சுவீகரித்தது வல்வை அணி…

கரவெட்டி மத்தொணி விளையாட்டுக்கழகம் நடாத்திய அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையிலான 9 நபர் 6 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமானது இன்றைய தினம் ( 16/01/2022) அன்று கரவெட்டி மத்தொணி விளையாட்டக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.. அந்த வகையில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் கரவெட்டி மகேசன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகமானது மோதியது.
நாணயற்சுழற்சியில் வெற்றிபெற்ற வல்வை அணியானது முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவுசெய்யது.. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை அணியானது பிரகதீஸ்வரன் மற்றும் கபிலன் ஆகியோரின் அதிரடியினால் நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை வெற்றுக்கொண்டது.. 77 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய கரவெட்டி மகேசன் அணியானது இறுதிவரை போராடி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.. இதன் மூலம் வல்வை அணியானது 6 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தினை தனதாக்கியது.
போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறையிலும் ஜொலித்த பிரகதீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற வல்வை அணிக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு இறுதிவரை சிறப்பாக செயற்பட்ட மகேசன் அணிக்கும் எமது,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்…
வல்வை அணியானது 6 ஓட்டங்களினால் வெற்றி













