வல்வை செய்திகள்

கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தினவிழாவும் 27.03.2022

கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தினவிழாவும் 27.03.2022

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டுவிழாவும் பாலர் தினவிழாவும் 27.03.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.

கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு திருமதி.துகாரதி ஞானச்சந்திரன் (ஆசிரியர், யா/தொண்டைமாணாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வில் கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.