Search

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம் அவர்கள் இன்று மாலை யாழ்மண்ணிலே, தன் இன்னுயிர் நீத்தார்.

கண்ணீர் காணிக்கைகள்
அமரர் – நடராஜசிங்கம் புவனலோசனி

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம் அவர்கள் இன்று மாலை யாழ்மண்ணிலே, தன் இன்னுயிர் நீத்தார்.

அவரை இழந்து துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சைனிங்ஸ் மூத்த உறுப்பினர் வேலுப்பிள்ளையின் மகள் நடராஜாசிவம் புவனலோசனிஅவர்கள் தனது குரல் ஓசை மெளனித்து. இறையுடன் ஐக்கியமாகிவிட்டார்..

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம் அவர்கள் இன்று மாலை யாழ்மண்ணிலே, தன் இன்னுயிர் நீத்தார்…!

இலங்கை வானொலியில் புகழ்மிக்க அறிவிப்பாளராக பல தசாப்த காலங்கள் புவனலோஜனி கோலோச்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி, எழுத்துத் துறையிலும் இவர் அறியப்பட்டிருந்தார். புவனலோஜனி எழுதிய பல சிறுகதைகள் வீரகேசரி உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.

சூரியன் எப்.எம் வானொலியின் ஸ்தாபக முகாமையாளர் நடராஜசிவம் – அங்கு பணியாற்றிய காலத்தில், திறமையுள்ள பலரை இனங்கண்டு, அந்த வானொலிக்கு அறிவிப்பாளர்களாக சேர்ப்பதில் புவனலோஜினி பின்னணியில் இருந்து ஆற்றிய பங்கு அளப்பரியதாகும்.

சூரியன் எப்.எம் வானொலியின் ஒலிபரப்பு தொடங்கப்பட்டபோது, அந்த வானொலியின் ‘கருப்பொருள்’ பாடலான (Theme song) ‘தங்கச் சூரியனே’ எனும் பாடலை, இசைத் தட்டை ஒலிக்க விட்டு ஆரம்பித்து வைத்தவர் புவனலோஜனி என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.