நெற்கொழு கழுகுகள் T-20 தொடர் KARANAVAI EAST அணியினை வீழ்த்தியது VALVAI அணி



நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகமானது யாழ்மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடைய மாபெரும் T-20 தொடரொன்றினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் ( 26/11/2022) இடம்பெற்ற போட்டியில் VALVAI அணியினை எதிர்த்து KARANAVAI EAST அணியானது மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய KARANAVAI EAST அணியானது 15.2 பந்துபரிமாற்றம் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. VALVAI அணி சார்பாக பந்துவீச்சில் அதிகபட்சமாக தர்ஷன் 4 ஓவர்கள் பந்துவீசி 4 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 இலக்குகளை கைப்பற்றினார்..
பதிலுக்கு 65 ஓட்டங்களை பெற்றால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய VALVAI அணியானது ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும் சஞ்சீவனின் நிதானமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 19.1 பந்துபரிமாற்றம் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது . VALVAI அணிசார்பாக துடுப்பாட்டத்தில் சஞ்சீவன் அதிகபட்சமாக 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
வல்வை அணி 3 இலக்குகளால் வெற்றி
போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட VALVAI அணியின் தர்ஷன் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு,தெரிவுசெய்யப்பட்ட VALVAI அணிக்கு









