வல்வை செய்திகள்

இலங்கை வடகிழக்கு பகுதியில் காற்றின் வேகமும் அதிகமாகக் காணப்படும். பொதுமக்களும், கடற்றொழிலா ளர்களும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள்.

வடக்கு மாகாணத்தில் அடுத்துவரும் நாள்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது . வடக்கு, கிழக்கு, வட மத்தி, ஊவா மற்றும் தென்மாகாணங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்தப் பகுதி இலங்கைக்குத்தெற்காக மாலைதீவு நோக்கி நகரவுள்ளது.

இன்று முதல், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மழை நிலைமை அதிகரித்துக் காணப்படும். எதிர்வரும் ஞாயிறு,திங்கள் வரை இந்த மழை நிலைமை காணப்படும்.

காற்றின் வேகமும் அதிகமாகக் காணப் படும். பொதுமக்களும், கடற்றொழிலா ளர்களும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள்.