மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும் கொழும்பு கல்கிசையை வதிப்பிடமாகவும் தற்போது வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாலசரஸ்வதி ( இளைப்பாறிய பட்டதாரி ஆசிரியை) 8-12 -2025 ( திங்கட்கிழமை) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் ஆருயிர் மனைவியும் காலஞ்சென்றவர்களான பருத்தித்துறை Petrol Set உரிமையாளர் கணேசபிள்ளை மகாலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் கல்வியங்காடு தம்பிபிள்ளை , சிவக்கொழுந்து தம்பதியினரின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற ஶ்ரீதேவி வாமனகணேசன் மற்றும் தியாகலிங்கம் ( கனடா) , ஈஸ்வரகுமாரி (கனி) சண்முகலிங்கம் ( சுவிஸ்) , இரஞ்சனாதேவி (மலர்) ( லண்டன் ) , ஞானம்பிகை( ராணி) ( நோர்வே) ஆகியோரின் சகோதரியும் , காலஞ்சென்ற C.K. சிவலிங்கம் மற்றும் முத்துச்சாமி, பாலசுப்பிரமணியம் ( லண்டன்) , தங்கவடிவேல் ( நோர்வே) , புஷ்பவதி ( சுவிஸ்) , இந்திராதேவி ( கனடா) , நிர்மலா ( சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னார் சுகன்ஜா( கனடா) , சதீஷ்குமார் ( லண்டன்) , தாட்சாயினி ( லண்டன்) , பொன்னுத்துரை ( லண்டன்) , கிறிஷான் ( நோர்வே) , வைஷ்ணவி(நோர்வே) ஆகியோரின் பெரியம்மாவும் சுதர்ஷன் (லண்டன்) , ஶ்ரீகரன் (லண்டன்) , வனிதா ( சுவிஸ்) , துஷ்யந்தன் ( கனடா) , துஷ்யந்தி (கனடா) , நிஷா( சுவிஸ்) , நிலஷ்சன்(சுவிஸ) நிலுஷா (சுவிஸ்) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10,12, 2025 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3.30 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
தகவல்
மைத்துனர் முத்துச்சாமி +94754206038









