வல்வை செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் ,பொதுநலவாய நாடுகளின் உள்ளுராட்சி ஒன்றியத்தினரின் கலந்துரையாடல்

உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் ,பொதுநலவாய நாடுகளின் உள்ளுராட்சி ஒன்றியத்தினரின் கலந்துரையாடல்

உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் பொதுநலவாய நாடுகளின் உள்ளுராட்சி
ஒன்றியத்தினரின் கலந்துரையாடல்
பொதுநலவாய நாடுகளில் உள்ளுராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் தலைவரும்
நியுசிலாந்தின் உறாஸ்ரிங்ஸ் மாவட்ட மேயர்.லோறன்ஸ் யூல் மற்றும் ஒன்றியத்தின்
செயலாளர் நாயகம் திரு.காரல் றைற் ஆகியோரின் அழைப்பின் பேரில் கொழும்பு
ரேணுகா சிற்றி விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இரவு விருந்து
உபசாரத்திலும் தெரிவு செய்யப்பட்ட சில உள்ளுராட்சி மன்றங்களின் மேயர்கள்
மற்றும் நகர முதல்வர்கள்இபல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோர்
அழைக்கப்பட்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலின் பொழுது தலைவர் மேயர். லோறன்ஸ் யூல். செயலாளர்
நாயம் கார்ல் றைற் ஆகியோருடனான தனிப்பட்ட முறையிலான ஒரு உரையாடலின்
பொழுது ‘வடமாகாணத்திற்கான மாகாண சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதால்
உங்களுடைய மாகாணத்தை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யமுடியும்’ என்று
வல்வெட்டித்துறை நகர பிதாவிடம் குறிப்பிட்ட பொழுதுஇஅவர் அதற்குப்
பதிலளிக்கையில்இ ‘ உலகத்தின் பார்வையில் தேர்தலை நடத்தி ஒரு மாகாண
சபையை உருவாக்கி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதாக அரசாங்கம்
குறிப்பிடுவதைத்தான் உலக நாடுகளும் நீங்களும் நம்பிக்
கொண்டிருக்கின்றீர்கள்.ஆனால் பெயரளவில் அதிகாரம் உள்ள ஒரு சபையாகக்
காட்டப்பட்டாலும்,உங்கள் நாடுகளில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு உள்ள
அதிகாரங்கள் கூட எங்களுடைய மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை.தற்பொழுது
முதல் தடவையாக எங்களுக்கு எல்லா வகையிலும் தகைமையுள்ள ஒரு
முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசாங்கம் அவரது நிர்வாகத்திற்குப்
பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் ஆளுநர் ஊடாக முட்டுக்கட்டைகள்
போடாது இருக்க வேண்டும். நாங்கள் கேட்பது போல் தமிழர்களின்
நிலங்களில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட்டு அவர்களுக்குச் சொந்தமான
நிலங்களில் அத்துமீறி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்களைக்
கட்டுப்படுத்த காணிஇபொலிஸ் அதிகாரங்கள் எங்களுடைய மாகாண சபைக்கு
வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் முடியும்.அதே வேளை வடமாகாணத்தின்
ஆளுநராக இருக்கும் இராணுவத் தளபதியை அகற்றி ஒரு சிவிலியன் ஒருவரை
ஆளுநராக நியமித்து ஜனாதிபதி அவர்கள் தனது நல்லெண்ணத்தைக் காட்ட
வேண்டும்.அத்துடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சுய நிரணய உரிமையுடன் கூடிய
தன்னாட்சி அதிகாரமும்இசம உரிமையும் வழங்கப்படுமானால் மட்டுமே தற்போதைய
மாகாண சபை நிர்வாகமானது அர்த்தமுள்ளதாக இருக்கும்’ என்று வெளிநாட்டுப்
பிரதிநிதிகளின் தனிப்பட்ட சந்திப்பின் பொழுதுஇவல்வெட்டித்துறை நகர பிதா
ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்ததை அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இக்கலந்துரையாடலிலும்இஇரவு விருந்திலும் குருநாகல் மாநகர மேயர் காமினி
பெரமுனகே இமாத்தளை மாநகர மேயர் மொகமட் கில்மிஇகுளியாப்பிட்டி நகரமுதல்வர்.
இவல்வெட்டித்துறை நகர முதல்வர் ந.அனந்தராஜ்இ கொழும்பு பல்கலைக் கழக
அரசியல் பிரிவுத் திணைக்களத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் தம்ம திசநாயக்கா
ஆகியோர் உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் பத்து உள்ளுராட்சி மன்றங்களின்
தலைவர்கள் கலந்து கொண்டனர்.இக் கலந்துரையாடல் பொதுநலவாய உள்ளுராட்சி
மன்றங்களின் ஒன்றியத்தின் செயல்திட்ட முகாமையாளர் திரு.சண்முகராஜா
அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *