வல்வை ஊக்குவிப்பு இளைஞர் குழுவினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஒரு நாள் உதைப்பந்தாட்ட போட்டி இன்று ரெயின்போஸ் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் ஏழு கழகங்கள் பங்குபற்றின.காலை தொடக்கம் மாலைவரை இப்போட்டிகள் நடைபெற்றன.
போட்டியின் இறுதிப்போட்டியில் சைனிங்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டு கழகம் மோதியது.இவ் ஆட்டத்தில் சைனிங்ஸ் வி.க 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றியை பெற்றுக்கொண்டது.இவ் ஆட்டத்தில் சிறந்த கோல் காப்பாளராக உதயசூரியன் வி.க சேர்ந்த சிவகுமாரும்,சிறந்த விளையாட்டு வீரராக சைனிங்ஸ் வி.கழகத்தை நிருபனும் தெரிவு செய்யப்பட்டார்கள்.பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.