தைத்திருநாள் வாழ்த்துக்கள் கலை கலாசார இலக்கிய மன்றம் வல்வெட்டித்துறை
அனைத்து வல்வையர்க்கும் தமிழர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் உறவுகள் மேம்படவும் இன்பங்கள் பெருகிடவும் கலை கலாசார இலக்கிய மன்றத்தினரின் அன்பு வாழ்த்துக்கள். இத்தமிழர் புதுவருடத்தில் சாந்தி, சமாதனம் நிலவிடவும் ஒற்றுமை, அன்பு பரவிடவும் இறைவனை பிரார்த்திப்போம். கலை கலாசார இலக்கிய மன்றம் வல்வெட்டித்துறை kalai.vvt@gmail.com vvtkalai.blogspot.com
வாழ்த்துகின்றோம்.
உலகுக்கு ஒளிதந்து உயரவானத்தில் தினம் வலம்வந்து பயிர்களை காத்துநின்று பசிபோக்கி உயிர்காக்கும் சூரியத்தேவனுக்கு நன்றிசொல்லும் இந்த நன்நாளில் பொங்குக என்றும், மகிழ்வும் துணிவும்.!! பொங்குக என்றும் அறிவும் ஆற்றலும்.!! பொங்குக என்றென்றும் இன்பமே இன்பமே. வானத்தில் சிறகடிக்கும் மற்றப் பறவையினம்போல நாமும் சிறகடிக்கவும் கூடுகட்டவும் குடியிருக்கவும் விடுதலை என்ற வரம்பெற்றவர்களாக வாழவும் இந்த பொங்கல்நாளில் உறுதியுடன்…
கேணல் கிட்டு: ஆளுமைகளின் மொத்தவடிவம்
கேணல் கிட்டண்ணா வீரச்சாவடைந்தபோது தேசியத்தலைவர் விடுத்த செய்தியை காலத்தின் தேவைகருதி மீண்டும் தருவதில் நிமிர்வுகொள்கின்றோம். கிட்டண்ணாவுக்கும் தலைவருக்குமான உறவு என்பது அண்ணன்- தம்பி போராளி -தலைவர் தளபதி -தலைவர் அப்பா- மகன் தோழன் -தோழன் என்ற எந்த உறவுக்குள்ளும் சுலபமாக அடையாளப்படுத்தி விடமுடியாதது. தேசியதலைவரின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது’ என்பதுதான்…
கேணல் கிட்டு நினைவாக
தமிழர்களின் வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தமிழ்மண் தமிழர்களின் நிர்வாகத்திற்குள் வருவதற்கு காரணமாக இருந்த தளபதி இவன். பன்முகஆளுமைகள் அத்தனையினதும் மொத்தவடிவம் இவனே. 16.01.1993 ல் இந்தியவல்லாதிக்க சதி ஒன்றில் வங்ககடலில் சுற்றிவளைக்கப்பட்டபோதும் சுதந்திரத்தின் மீதான உறுதியை எடுத்துகாட்ட தீயினில் கலந்தவன். கேணல் கிட்டுவினதும் அவருடன் வீரகாவியமாகிய ஒன்பதுதோழர்களினதும் நினைவாக..
2 வது வல்வெட்டித்துறை கலை இலக்கிய பெருவிழா
கலை கலாசார இலக்கிய மன்றத்தினால் வல்வெட்டித்துறையின் இரண்டாவது வருடாந்த கலை இலக்கிய பெரு விழா 01.01.2012 அன்று நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மலை 04.00 அளவில் தமிழ் பாரம்பரியத்துடன் கோலாகலமாக நடைபெற்றது . இதில் பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கலாமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் ….
வரலாற்றின் பிரமிப்பு : கப்டன் பண்டிதர் நினைவுகுறிப்புகள் – ச.ச.முத்து
விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு நகர்ந்துகொண்டிருக்கிறது.நின்றும்,நகர்ந்தும்,அதி வேகமான பாய்ச்சலுடனும்,தேங்கியும்,பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான வரலாற்றுதேடல் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்துவி;டுகின்றன.அத்தனை அர்ப்பணமும்,ஈகமும்,தியாகமும் அவர்களின் வரலாறுமுழுதும் நிறைந்தே கிடக்கும்.அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவனாகவே கப்டன் பண்டிதர் நிற்கிறான். தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி-ஆயுதங்களுக்கு பொறுப்பாளன்,முதலாவது யாழ்மாவட்ட பொறுப்பாளன்,மத்தியகுழு உறுப்பினன் என்று விடுதலைக்கான பல…
வல்வைபுளுஸ் பொன்விழாமலர் பற்றி வீரசேகரியில்..
இலங்கையில் மிக பிரபலமானதும் அதிக வாசகர்களை கொண்டதுமான வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறுபத்திரிகையில் (08.01.2012) வல்வை புளுஸ்கழகத்தின் ஐம்பதாவதுஆண்டு நிறைவுக்காக வெளியிடப்பட்ட பொன்விழா மலரை பற்றிய சிறிய அறிமுகமும் ஆக்கமும் வெளிவந்துள்ளது. எமது உறவுகளுக்கு இதனை நாம் பெருமையுடன் வழங்குகின்றோம்.
வல்வை ஒன்றியத்தின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட இரத்ததான முகாம்
வல்வை ஒன்றியத்தின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு, புத்தாண்டின் முதற் செயற்திட்டமாக ‘உதிரம் கொடுப்போம்;;’ ‘உயிரைக் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் 50 இற்கு மேற்பட்ட இரத்தக் கொடையாளர்களின் பங்களிப்புடன் வெகுவிமரிசையாக இரத்ததானம் நடைபெற்றது. இவ் இரத்ததானமுகாமில் வல்வை ஒன்றியத்தின் நிர்வாகத்தினரும், வல்வை வாழ் மக்களும் இரத்தம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மற்றும் இந்நிகழ்ச்சியை மெருகூட்டுமுகமாக வல்வையில்…
கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற கமலவாசனுக்கு மக்கள் வங்கி வல்வைக் கிளை கௌரவம்
க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட கமலவாசனுக்கு மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளை ரூபா ஒரு லட்சம் வழங்கியுள்ளது. ஏற்கனவே மக்கள் வங்கி கமலவாசனுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு மக்கள் வங்கியின்…
பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் முத்திரை வெளியீடு
பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் முத்திரை வெளியீடு பல நாடுகளில் தேசியத்தலைவர் மற்றும் தேசியத் சின்னங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதைப்போலவே பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் படம் பிரித்தானியக் கொடியோடு சேர்த்து வெளியிட்டதில் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் [ www.rste.org ] ஆகிய நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இதைப்போன்ற முத்திரைகளை பிரித்தனியாவைச் சேர்ந்த எவரும் வெளியிடலாம் என்றபோதும். படங்கள் சிறந்த…
மாதந்தையின் 2ம்ஆண்டு நினைவு இன்று
பேரிருள் சூழ்ந்த எம் இருண்ட வானத்தின் இருள் அகற்ற வந்த சூரியதேவனை எமக்களித்த மாதந்தை அமரர் தி.வேலுப்பிள்ளை நினைவு இன்று 2010 ஜனவரி 6ம்நாள் பனாகொட சிங்களராணுவமுகாம் சிறைக்குள் மரணத்தை தழுவிக்கொண்ட திரு.திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இரண்டாம்ஆண்டு நினைவு இன்று. வில்லை இழந்து வேலும் இழந்தும் எதிர் சொல்லையும் இழந்து நூற்றாண்டு நூற்றாண்டாய் கூனி குறுகி…
கேணல் சாள்ஸ் நினைவுதினம் இன்று (05 ஜனவரி)
தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மிகமூத்த தளபதிகளில் ஒருவன். தமிழீழம் கடந்து வெளியேதான் இவன் விடுதலைக்காக உறைந்திருந்தான். சிங்களத்தின் மூளைக்குள் துளையிட்டு இவன் உட்கார்ந்திருந்தவன். சிங்களதேசத்தின் எந்த இடமும் ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையை உருவாக்கியவன். சிங்களதேசத்தின் பொருளாதார மூதுகெலும்பில் சம்மட்டி அடி கொடுத்தவன். ஒரு வீரவலாற்றின் ஆழமான சின்னம் கேணல் சாள்ஸ். .தலைதாழ்த்தி வணங்கி நிமிர்வோம் வீரவணக்கங்கள்…











