யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டும் சுவரில் தலையை அடித்துமே கொலை!! 5 பொலிசார் கைது
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு தமிழ் பொலிஸ் உட்பட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் பொலிசார் நிற்பதை அவதானிக்காது சென்ற போது
அவர்கள் மீது அங்கு கடமையில் நின்ற பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் ஒரு மாணவன் காயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மதிலுடன் மோதியுள்ளான். துப்பாக்கிக் காயம் பட்ட மாணவன் சம்பவ இடத்தில் மரணமடைந்ததால் கடும் பதற்றமடைந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் வீழ்ந்து காயமடைந்த மற்றைய மாணவனை பிடித்து தலையை மதிலுடன் மோதிக் கொலை செய்ததாக சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் பொலிசார் தாக்கும் போது பலமாக கத்திக் குளறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதால் தப்பிய மாணவன் தமக்கு சாட்சியாக மாறும் அபாயம் இருப்பதாக எண்ணியே பொலிசார் மற்றைய மாணவனையும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. இதே வேளை சற்று முன் சம்பவ இடத்தில் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த ஒரு தமிழ்ப் பொலிஸ் உட்பட 5 பொலிசார் கைது செய்யப்பட்டு யாழ் பொலிஸ் நிலைய தடுப்புக் காவல் அறைக்குள் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.











