தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவே சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என்று யாழ்ப்பாண கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் படையினர் விழிப்பாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையும், பிரித்தானியாவும் அமெரிக்காவும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து படையினர் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
எனினும் அவற்றின் கோரிக்கைக்காக படை முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.