மகா கும்பாபிஷேகம்……. தை மாதம் 27 ம் திகதி. ஞாயிற்றுக்கிழமை.
தைமாதம் 23ம் திகதி புதன்கிழமை கணபதி கோமத்துடன் கிரியைகள் ஆரம்பமாகி தொடர்ந்து அன்றையதினம் புதிதாக அமைக்கப் பட்ட நாராயண சமேத பூலக்ஷ்மி ,மகாலக்ஷ்மி வன்னிச்சி அம்மன் கோவிலில் இருந்து மாலை 4.00 மணியளவில் ஊர் வலமாக எமது ஆலயத்துக்கு வருவர். தொடர்ந்து 24,25 ஆகிய நாட்களில் கும்பாபிஷேக கிரியைகள் நடை பெற்று 25 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஆலயத்திலே மூர்த்திகள் யாவும் ஸ்தாபிக்கப்படும். தொடர்ந்து 26ம் திகதி சனிக்கிழமை காலை 6.00 மணியில் இருந்து மாலை 4.00 மணி வரை பக்தர்கள் எண்ணெய் காப்பு இடம்பெறும். 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் விநாயகப்பெருமான், நாராயணப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயர், வைரவர், ஏனைய மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடை பெறும்………..இதனை கண்டுகளித்து எம்பெருமானின் அருட் கடாட்ஷத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்…