கணபதி பாலர் பாடசாலை தூண்களுக்கான அடித்தளமிடும் வேலைகள் இன்று ஆரம்பமானது
==============================================================================
நடைபெற்றுக் கொண்டிருக்கும் கணபதி பாலர்பாடசாலையின் கட்டடப் பணிகளில் தற்போது தூண்களுக்கான கிடங்குகள் அகழப்பட்டு தூண் கம்பிக்கூண்டுகள் கட்டி நிமிர்தப்பட்டு இன்று தூண்களுக்கான அடித்தளமிடும் வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமான அத்திவாரமிடுதலும், தூண்போடுதலும் அடுத்த மாத இறுதிவரை (பங்குனி) நடைபெறும். தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கீழ்த்தள பாலர் பாடசாலை வேலைகளும், மூன்றாம் கட்டமாக மேல்த்தள மண்டப வேலைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே கணபதி படிப்பகத்தின் அங்கத்தவர்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள் மற்றும் கணபதி பாலர் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரிடமிருந்தும் பெரும் நிதிப்பங்களிப்பினை மிகவும் தயவாக வேண்டி நிற்கின்றோம்.