வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளில் தற்போது பெருவிளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன இன்று மாலை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து துடுப்பாட்டப்போட்டியின்( Soft Ball Cricket) இறுதிப்போட்டியில் தீருவில் விளையாட்டுக் கழகத்ததை எதிர்த்து றெயிப்போ விளையாட்டுக் கழகம் மோதியது தீருவில் விளையாட்டுக் கழகம் 12 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது றெயின்போ விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்திற்கு வந்தது.
குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இதுவரை காலமும் துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் ( Soft Ball Cricket) நடப்பு சம்பியன் பட்டத்தை தக்க வைத்திருந்தது றெயின்போ விளையாட்டுக் கழகம் அதனை இன்று தீருவில் விளையாட்டுக் கழகம் தட்டிச் சென்றது