வல்வை செய்திகள்

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மடம் மீள் புதிப்பிக்கப்படவுள்ளது

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மடம் மீள் புதிப்பிக்கப்படவுள்ளது

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மடம் அதன் உரித்தாளர்களின் முழு நிதி அனுசரணையுடன் மீளமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாள 100 வருட பழமை வாய்ந்த மேற்படி மடத்தில் பல திருத்தவேலைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால். அதனை அதே பழை மாறாமல் முன் முகப்பு மடடும் அழகிய மாடத்துடனும், ஏனைய பகுதிகள் பழமைமாறாமலும் கட்டுவதற்கு ஆலய பரிபாலன சபையின் பொதுச்சபை அனுமதியுடன் முதல்க்கட்ட வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மேற்படி மடத்திலேயே தற்போது நெடியம்பதியானின் திருவிழாக்காலங்களிலும், வல்வை வைத்தீஸ்வரர் தீர்த்தஉற்சவத்தின்போதும் அடியவர்களிற்கு அன்னதானம் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் வல்வையின் பெரும்விழாவாகிய இந்திரவிழாவிற்கும் அனைத்து வேலைகளiயும் ஒருங்கமைக்கும் இடமாகவும் இது திகழ்வது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் சிவன் திர்த்தஉற்சவத்திற்கு முன்னராக அனைத்து வேலைகளையும் நிறைவு செய்வதற்கு ஏதுவாக வேலைகள் விரைந்து முன்னெடுக்கப்படவுள்து.

மீளமைக்கப்படவுள்ள மடத்தின் தோற்றமும், தற்போதைய நிலையில் மடத்தின் தோற்றமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *