31 ஆம் நாள் நினைவு அஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவிலலும். அமரர். முத்துக்குமார் தங்கவேல்
31 ஆம் நாள் நினைவு அஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவிலலும்.
அமரர். முத்துக்குமார் தங்கவேல்
கடந்த 10.04.2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது அப்பா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் 10.05.2019 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 6:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊறணி தீர்த்த சமுத்திரத்தில் அஸ்தி கரைக்கப்படும்.
அதனைத்தொடர்ந்து சபீண்டிகரன கிரியைகள் பகல் 11:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரார்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
மேலும் எமது அப்பா மறைவுச் செய்தியறிந்து நேரில் வருகை தந்தும், தொலைபேசி, தந்தி வாயில்களாகவும் துண்டுப்பிரசுரம், பாதாதைகைகள் மலர் வளையம் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தோர்க்கும், மற்றும் பலவழிகளிலும் உதவிகள் ஒத்தாசைகள் புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எம் குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
இங்ஙனம்
குடும்பத்தினர்








