28 – 34 வயதுப்பிரிவில் யோகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை யோகா மாணவி திருமதி இராஜமுகுந்தன் மதுமினா

28 – 34 வயதுப்பிரிவில் யோகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை யோகா மாணவி திருமதி இராஜமுகுந்தன் மதுமினா

அண்மையில் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மத்திய நிலையத்தில் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை 2019 போட்டியில் 28 – 34 வயதுப்பிரிவில் பங்குபற்றி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி இராஜமுகுந்தன் மதுமினா முதலாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இப்போட்டியில் வல்வெட்டித்துறை மாணவர்கள் 2தங்க பதக்தையும் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுள் அதிகமணவர்கள் வல்வையர்கள் என்பது குறிப்பிடதக்கது.

வல்வெட்டித்துறை யோக நிலையத்தின் ஆசிரியர் திருமதி சியாமிளா அவர்களுக்கும்   இந்தியாவிலிருந்து வருகை தந்து  வல்வெட்டித்துறை யோகா நிலைய பிரதம ஆசிரியருடன் சேர்ந்து  யோகா கலையை கற்பித்த மதிப்பிற்குரிய வல்வெட்டித்துறை மாணவ மாணவர்களுக்கு யோகா கல்வியைக்  கற்பித்த  ஆசிரியருக்கும்  வல்வெட்டித்துறை மக்கள் சார்பாகவும்  எமது நலன்புரிச் சங்கம் சார்பாகவும்  நமது இணையதளம்   www.vvtuk.com சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *