க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட கமலவாசனுக்கு மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளை ரூபா ஒரு லட்சம் வழங்கியுள்ளது.
ஏற்கனவே மக்கள் வங்கி கமலவாசனுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது.
அதன்படி காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளை முகாமையாளர் மற்றும் கல்லூரி அதிபர், ஆசிரயர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் கமலவாசனுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.