வல்வை செய்திகள்

வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் மற்றும் அல்வாய் மனோகரா அணிகள்.

வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் மற்றும் அல்வாய் மனோகரா அணிகள்.

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

தொடரில் முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா (ஏழு இலட்சம்) பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்.

அந்தவகையில்இன்றைய தினம் (12/03/2020) இடம்பெற்ற ஆட்டங்களின் முதலாவது ஆட்டத்தில் பாசையூர் சென்அன்ரனீஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணியானது மோதியது.

விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத இவ்வாட்டமானது ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாமல் சமனிலையடைந்தது.

எனவே வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணியானது 05:04 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று 3ம் சுற்றுக்கு தெதிவாகியது..

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் கொற்றாவத்தை சிவானந்தா அணியினை எதிர்த்து அல்வாய் மனோகரா அணியானது மோதியது.

பரப்பான ஆட்டத்தில் 01:00 என்ற கோல்கணக்கில் மனோகரா அணியானது வெற்றி பெற்று 3ம் சுற்றுக்குள் நுழைந்தது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *