வல்வை செய்திகள்

வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம்

வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம்

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

தொடரில் முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா (ஏழு இலட்சம்) பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்.

அந்தவகையில் இன்றைய தினம் (13/03/2020) இடம்பெற்ற ஆட்டத்தில் ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது.

பரப்பான ஆட்டத்தில் 02:00 என்ற கோல்கணக்கில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று 3ம் சுற்றுக்குள் நுழைந்தது.

ஆட்டநாயகனாக வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்க்கழக கிருபாகரன் தெரிவுசெய்யப்பட்டார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *