அந்தியேட்டி அழைப்பிதழ் அமரர் இராமலிங்கம் செல்வச்சந்திரன்


மண்ணில் 1960.06.11 விண்ணில்2022.09.08
08.09.2022 அன்று அமரத்துவம் அடைந்த எங்கள் குடும்பத்தலைவரின் செய்தி கேட்டு ஆறுதல் கூறியவர்களுக்கும் கண்ணீர் பதாகைகள் வைத்த கடற்தொழிலாளர்கள் சங்கம், கழகங்கள்,இணைய வாயிலாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய வர்களுக்கும் இணையத்தின் மூலம் அறிவித்தலை பிரசுரித்தவர்களுக்கும் நேரில் வந்து உதவி செய்தவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு நிகழும் 07.10.2022 அன்று காலை ஊரணி கிரியை மண்டபத்தில் நடைபெறும் அந்தியேட்டிக் கிரியைகளிலும் அதனைத் தொடர்ந்து , வீட்டில் நடைபெறும் சபண்டிகரண கிரியை களிலும் பங்கு பெறுவதோடு மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்









