பன்னீரெண்டு மாவீரர்களின் 35ம் வது ஆண்டு நினைவு இன்று குமரப்பா புலேந்திரன் உடன் 12 வேங்கைகளின் நினைவாலயம் இருந்த இடத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.05.10.2022
பன்னீரெண்டு மாவீரர்களின் 35ம் வது ஆண்டு நினைவு இன்று குமரப்பா புலேந்திரன் உடன் 12 வேங்கைகளின் நினைவாலயம் இருந்த இடத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.05.10.2022
வீரவணக்கம் . 05.10.1987 தளபதிகள் குமரப்பா , புலேந்திரன் , மற்றும் முன்னணிப் போராளிகள் அப்துல்லா , ரகு , நளன் , ஆனந்தகுமார் , மிரேஸ் , அன்பழகன் , ரெஜினோட் , பழனி , கரன் , தவக்குமார் ஆகிய பன்னிரெண்டு மாவீரர்களுக்கும் வீரவணக்கம் நடைபெற்றுள்ளது !
இதில் பின்வரும் கோரிக்கைகள் சர்வதேசத்தை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளது
* இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்தில் ( ICC ) நிறுத்துவோம் .
*இலங்கையில் வடக்கு – கிழக்கு மாநிலத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு ( Independence Referendum ) ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் வாக்களிக்கக் கூடியவாறு ஐ . நா . கண்காணிப்பில் நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்தைக் கோருகின்றோம்.
இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழ மக்கள் ,வேலன் சுவாமி அடிகளாரும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அதகளம் நினைவுரையாற்றியுள்ளனர்கள்.











