தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியான 18 வயதுடைய ஜெகன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஜெகன், கடந்த 2008 முதல், மண்டபம் அகதிகள் முகாமில், பெற்றோருடன் வசித்து வந்தார்.

வீடு அருகில் உள்ள ஆள் இல்லாத அறையில் உறங்கிக் கொண்டிருந்த இவரை அதிகாலையில், அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது பிணமாக கிடந்துள்ளார்.

கைகள் மடக்கப்பட்ட நிலையில், வலது தொடை, ஆண் உறுப்பு அருகில் போத்தலால் கீறப்பட்ட காயங்கள் இருந்தன.

மண்டபம் பொலிஸாரின் விசாரணையில், இவர் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *