Search

நடைபெற்ற ஆலோசனைகூட்டவிபரங்கள்.-கோடைவிழா2012 சம்பந்தமானது

இணையத்தில் கொடுக்கப்பட்ட அறிவித்தலின்படி 08.06.2012(வெள்ளி) அன்று கோடைவிழா2012 வை  எவ்வாறு சிறப்பானதாக நடாத்துவது என்ற ஆலோசனைக்கூட்டம் மிற்சம் சிவன்கோவிலில் அமைந்துள்ள வல்வைஅரங்கில் மாலை 7:45மணிக்கு வல்வைநலன்புரிசங்க தலைவர் உதயணன் தலைமையில் ஆரம்பமானது.நலன்புரிச்சங்க செயலாளர் ஞானச்சந்திரன்(ஞானம்)  கூட்டத்தை நெறிப்படுத்தினார்.
அந்த கூட்டத்தின் சில முக்கியவிடயங்களை இங்கு தருகின்றோம்.

1)கடந்த வருடங்களில் கோடைகாலவிழா நிகழ்வுக்கான ஆலோசனைக்கூட்டங்களில் கலந்துகொண்டதுபோலவே இம்முறையும் ஆட்களின் எண்ணிக்கை இருந்தது.ஆனாலும் இனிவரும் ஆலோசனைக்கூட்டங்களில் அதிக அளவில் கலந்துகொள்ளவேண்டும் என்ற அறிவித்தல் விடப்பட்டது.

2)ஒருபோதும் இல்லாத அளவில் இம்முறை மிக அதிகஅளவிலான அனுசரணையாளர்கள் தாமாகவே முன்வந்தும் எமது நிர்வாகத்தினர் அணுகியும் பெரும் அனுசரணைகளை வழங்க முன்வந்திருப்பது எமது நிகழ்வின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.

3) யூலை1ம்திகதி நடைபெறஉள்ள கோடைகாலவிழா2012 நிகழ்வின் அனைத்து பொறுப்புகளையும் எவ்வாறு சம்பந்தபட்டவர்களிடம் பிரித்து அளித்து நிர்வாகத்தை இலகுவாக்குவது எவ்வாறு என்றும் ஆலோசிக்கப்பட்டது.

4)மாவீரர்களின் பெயரிலான கிண்ணங்களை புதிதாக அன்பளிப்பு செய்வோருக்கு ஒரு காலவரையறையை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது(இது தனித்து அறிவித்தலாக வெளிவரும்)

5)புதிதாக ஓரிரண்டு விளையாட்டுகளை அறிமுகம்செய்து இம்முறை நடைத்துவது என்றும் தீர்மானிக்கபட்டது

6)மைதானம்,பரிசளிப்புமேடை,உணவகம், முதலுதவி, வரவேற்பு, விளம்பரம், பாதுகாப்பு, வாகனதரிப்பிடம்,பரிசில்கள்,விளையாட்டுகள(கால்பந்து, கரப்பந்து, மெய்வல்லுநர், துடுப்பெடுத்தாட்டம், காபடி,கிளிதட்டு,கிறீஸ்கம்பம்,வலைப்பந்து போன்றவை) என்பன நிர்வாகத்தின் அனுசரணையுடன் யார் யார் பொறுப்பாளர்களாக இருந்து நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

7)ஆரம்பவேலைத்திட்டங்கள் சம்பந்தமான இந்த கூட்டம்போலவே நடைபெறும் வேலைகள் சம்பந்தமான முன்னேற்றங்கள் குறித்து அடுத்த கூட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

இதனைபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு கூட்டம் மாலை 09:50மணிக்கு முடிவடைந்தது.
அடுத்த கூட்டங்களுக்கு அனைவரும் வந்து இன்னும் சிறப்பான கருத்துகளையும் ஊக்கத்தையும் தரும்படி கேட்டுகொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகட்கு:
த.உதயணன்(தலைவர்): 07578086782
பா.ஞானச்சந்திரன்(ஞானம்) (செயலாளர்:07740463223




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *