Search

வல்வை சிவகுரு வித்தியாசாலை பரிசளிப்பு விழா அறிக்கை,புகைப்படங்கள்.

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை
பரிசளிப்பு விழா 2011/2012

பாடசாலை அதிபரின் அறிக்கை

மதிப்பிற்குரிய சிவஸ்ரீ தண்டபாணிகதேசிகர் அவர்களே! மதிப்பிற்குரிய பிரதமவிருந்தினர் வடமாகாண சபை கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன் அவர்களே! அவர்தம் பாரியார் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி. இராஜஇராஜேஸ்வரி சத்தியசீலன் அவர்களே! சிறப்பு விருந்தினர் பருத்தித்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ச.சிறீஇராமச்சந்திரன் அவர்களே! பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.கா.தர்மகுலசிங்கம் அவர்களே! பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.அ.தங்கவேலாயுதம் அவர்களே! வருகை தந்துள்ள கல்வி அதிகாரிகளே ஆசிரிய ஆலோசகர்களே பிற பாடசாலை அதிபர்களே ஆசிரியர்களே அமைப்புக்களின் உறுப்பினர்களே பழைய மாணவர்களே பெற்றோர்களே எமது பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளே மாணவர்களே நலன் விரும்பிகளே அனைவருக்கும் அன்பு கனிந்த வணக்கங்கள் உரித்தாகுக.
நீண்ட வரலாறு படைத்த பாரம்பரியச் சிறப்புமிக்க யாஃவல்வை சிவகுரு வித்தியாசாலையின் அருகமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வல்வை வடிவாம்பிகை சமேதவைத்தீஸ்வரப்பெருமானதும் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மனதும் பாதங்களைப் பணிந்தேத்தி பாடசாலையின் ஆரம்பகர்த்தா திரு.தையல்பாகர் அவர்களை மனதால் பூஜித்து இக்கல்விச்சாலையின் பரிசளிப்பு விழா 2011ஃ2012 அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய பரிசளிப்பு விழா எமது பாடசாலைக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் நன்னாளாகும். இன்றைய விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருக்கும் வட மாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அவர்களை எமது பாடசாலைக் கல்விச்சமூகம் வாழ்த்தி வரவேற்பதில் பெருமையடைகின்றது. அவர் இப்பதவியினை ஏற்பதற்கு முன்னர் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளராக சிறந்த முறையில் பணியாற்றி தேசிய மட்ட முகாமைத்துவப் போட்டியில், கரவெட்டி பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற காரணமாக அமைந்து சாதனைபடைத்த சாதனையாளர் இன்றைய விழாவின் முதன்மை விருந்தினராக வருகை தந்தமையால் பாடசாலைச் சமூகம் பெருமைகொள்கின்றது. அத்துடன் அவர் கல்விப்பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் (வடமாகாணம்) செயலாளராக பதவியேற்றத்தின் பின்னர் இன்றைய நாளில் எமது கல்விச் சமூகம் வாழ்த்தி வரவேற்பதில் பெருமைகொள்கின்றது. அத்துடன் அவரது வெற்றிக்குப் பின்புலத்தில் துணையாக அமைந்து செயற்படும் அவரது துணைவியார் திருமதி.இராஜஇராஜேஸ்வரி சத்தியசீலன் அவர்களும் கலந்து எமது மாணவர்களுக்கு பரிசில் வழங்குவதனாலும் எமது கல்விச் சமூகம் பெருமையடைகின்றது.
அதே போன்று பருத்தித்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளராக புதிதாகப் பதவியேற்றுள்ள திரு.ச.சிறீஇராமச்சந்திரன் அவர்களையும் எமது பாடசாலைக் கல்விச் சமூகம் வாழ்த்தி வரவேற்பதில் பெருமையடைகின்றது.

2012ம் ஆண்டு மாணவர் தொகை பின்வருமாறு அமைந்திருந்தது
தரம் ஆண்கள் பெண்கள் மொத்தம்
1 11 08 19
2 06 12 18
3 22 13 35
4 19 14 33
5 20 15 35
6 13 23 36
7 21 16 37
8 17 11 28
9 23 11 34
10 12 14 26
11யு 11 18 29
11டீ 07 10 17
மொத்தம் 182 165 347

தற்போது பாடசாலை ஆசிரியர்கள்
பட்டதாரி ஆசிரியர்கள் 13
பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் 07
பகுதி நேர ஆசிரியர்கள் (2 நாள்) 04
பகுதி நேர ஆங்கில ஆசிரியை 01
மொத்தம் 25

25-09-2011ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர்கள்

1. திருமதி.க.சிவனருட்சோதி 12-01-2012

2. திரு.சி.கிருஷ்ணகுமார் 14-03-2012

3. திரு.ந.பாக்கியநாதன் (2நாள்) 16-05-2012

4. திரு.தெ.சுகுமார் 22-05-2012

5. திருமதி.ஸ்ரீ.சுபேந்திரன் 17-09-2012

பாடசாலையை விட்டு விலகியோர்
1. ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றோர்
• திருமதி.ந.மணிராஜன் 14-05-2012

3. திருமதி. வ.விஜயப்பிரகாஷ் 14-05-2012

4. செல்வி.ஸ்ரீ.சிவலிங்கம் 14-05-2012
2.
3. 2. இடமாற்றம் பெற்றுச் சென்றோர்

3. திருமதி.சு.மங்களரூபன் 13-06-2011

4. திருமதி.த.சற்குணராசா 01-01-2012

5. திரு.பா.சிறிகுமரபரன் 14-03-2012

6. திரு.த.சுரேஷ்குமார் (2நாள்) 14-03-2012

7. திரு.வா.விநாயகமூர்த்தி 19-09-2012
4.
5. ஓய்வு பெற்றுச் சென்றோர்

3. திருமதி.ந.திருநாவுக்கரசு 01-07-2012
6.
7. எமது பாடசாலையில் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றிருந்த திருமதி. வ.விஜயப்பிரகாஷ், திருமதி.ந.மணிராஜன், செல்வி.ஸ்ரீ.சிவலிங்கம் ஆகிய மூவருக்கும் ஆரம்பக் கல்வி பயிற்சி நெறிக்காக கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு 14-05-2012இல் அனுமதி கிடைத்து சென்றுள்ளனர். அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன் பயிற்சி முடித்து எமது பாடசாலைக்கே மீண்டும் வருகை தந்து கடமையாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
8. அதே போன்று திரு.பா.சிறிகுமரபரன் அவர்கள் எமது பாடசாலையில் ஐஊவு, வரலாறு ஆகிய பாடங்களை சிறப்பாக போதித்து வந்தார். அதே போன்று திரு.த.சுரேஷ்குமார் அவர்கள் சித்திரபாட பகுதிநேர ஆசிரியராக கடமையாற்றிவந்தபோது வெளிமாவட்ட சேவையை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்கள். அவர்களது பாடசாலைச் சேவைக்காக பாராட்டுவதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.
9. எமது பாடசாலையில் 01-03-1985 முதல் ஆசிரியராகவும் 01-04-1996 முதல் பகுதித் தலைவராகவும் கடமையாற்றி வந்த திருமதி.ந.திருநாவுக்கரசு அவர்கள் 01-07-2012 முதல் ஓய்வு பெற்றுச்சென்றுள்ளார். அவர் எமது பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாகவும் பிரதி அதிபராகவும் ஏறக்குறைய கால்நூற்றாண்டுக்கு மேலாக அரும்பணிஆற்றியுள்ளார். அவரது அனுபவமும் சேவையும் இழக்கப்பட்டமை பாடசாலைக்குப் ஈடில்லாத பேரிழப்பாகும். பாடசாலையின் சகல பணிகளிலும் முன்னின்று செயற்பட்டதுடன் தனது கடமையின் இறுதி நாள் வரை அர்ப்பணிப்புடன் ஆசிரியக் கடமையை மேற்கொண்டவராவார். அவர், முன்னால் அதிபர் திரு.த.தபேந்திரராஜா அவர்கள் கோட்டக்கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுச் சென்று நான் பதவி ஏற்கும் வரை பதில் அதிபராக இக்கட்டான நிலையில் கடமையாற்றி பாடசாலையின் உயர்வுக்காக சிறப்பாகப் பணியாற்றியமையை பாடசாலைச் சமூகம் பாராட்டுகிறது. அவரது சேவைக்காக பாடசாலைச்சமூகத்தின் சார்பில் பாராட்டுதல்கள் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஓய்வுக்காலம் குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமாக அமைய எல்லாம் வல்ல இறைவணை வேண்டுகிறேன். இவரது ஓய்வினைத்தொடர்ந்து எமது பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியை திருமதி.ச.புலந்திரலிங்கம் இடைநிலைப்பிரிவு பகுதித்தலைவராக வலயக்கல்விப் பணிப்பாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
10.
பரீட்சைப் பெறுபேறுகள்
5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை
ஆண்டு பரீட்சைக்குத்
தோற்றியோர் சித்தியடைந்தோர் சதவீதம்
2011 34 01 3மூ
2011 34 14 (100புள்ளிக்கு மேல் பெற்றோர்) 41ம%
11.
க.பொ.த. (சாஃத) பரீட்சை – 2011
பாடங்கள் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை தோற்றியோர் எண்ணிக்கை சித்தியடைந்தோர் எண்ணிக்கை சித்தியடைந்த
வீதம்
சமயம் 45 40 36 90மூ
தமிழ் 45 40 18 45மூ
ஆங்கிலம் 45 40 03 08மூ
விஞ்ஞானம் 45 40 13 33மூ
கணிதம் 45 40 17 43மூ
வரலாறு 45 40 17 43மூ
புவியியல் 32 28 10 36மூ
வர்த்தகம் 13 12 04 33மூ
சங்கீதம் 13 10 09 90மூ
நடனம் 3 02 02 100மூ
சித்திரம் 29 25 19 76மூ
ஐஊவு 04 03 01 33மூ
கடல்வளம் 41 37 33 89மூ
12.
ஆண்டு பரீட்சைக்குத்
தோற்றியோர் உயர்தர பிரிவுக்கு தெரிவானோர் சதவீதம்
2011 40 13 32.5மூ
13.
14. இப்பெறுபேறுகள் எதிர்காலத்தில் சாதகமாக மாற்றப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாண்டு சில இலக்குகளை முன்வைத்து செயற்றிட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். தரம் -2 முதல் தரம் – 11 வரை எழுத வாசிக்கத் தெரியாத தன்மையை இல்லாதொழித்தல், ஆங்கில அறிவை விருத்தி செய்தல், க.பொ.த.சாதா.பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர வகுப்பிற்குச் செல்வோர் வீதத்தினை அதிகரித்தல் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்று வீதத்தினை உயர்த்துதல் ஆகியன இவ்வாண்டுக்கான முக்கிய இலக்குகளாக அமைக்கப்பட்டு செயற்றிட்டங்களை செயற்படுத்தியுள்ளோம்.
15.
16. நூலக அபிவிருத்தி
17. எமது பாடசாலையின் கட்டிடத் தொகுதியில் நூலகத்திற்கென ருNஐஊநுகு அமைப்பினால் இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதும் அவை கண்ணாடி யன்னல்களால் மட்டும் மூடப்பட்டிருந்தமையினால் பாதுகாப்பற்றதாகக் காணப்பட்டதுடன் நூலகத்துக்கான தளபாடங்களோ நூல்களோ வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் மாணவர்களுக்கான நூலகத்தின் அவசியத்தன்மையை உணர்ந்து 50 ஒ 20 பரப்புடைய நூலகத்தின் உட்பக்கமாக பாதுகாப்பிற்காக கிறில் போடப்பட்டதுடன் நூலக அபிவிருத்திக்காக பழைய மாணவர்(கனடா) திரு.ச.முரளீதரன் நண்பர்கள் மூலமாக கிடைத்த நிதியிலிருந்து 275840ஃஸ்ரீ நிதியைப்பயன்படுத்தி நூலகத்தின் தளபாடங்களும் கொள்வனவு செய்யப்பட்டது. அத்துடன் திருமதி.வள்ளிக்கொடி கணேஸ் அவர்கள் நூலக அலுமாரி ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளார். மேலும் நூல்களை கொள்வனவு செய்வதற்காக வல்வெட்டித்துறை மக்கள் வங்கி ரூபா 15000ஃஸ்ரீவையும், பழைய மாணவர் சங்கப் பொருளாளர் திரு.இ.மயூதரன் ரூபா 15000ஃஸ்ரீவையும், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு.க.முகுந்தன் ரூபா 10000ஃஸ்ரீவையும், ர்.ழு.P. நிதிமூலமாக ரூபா 10000ஃஸ்ரீவையும் பெற்று நூல்களைக் கொள்வனவு செய்துள்ளோம். நூலகத்திற்கான நாளாந்த பத்திரிகைகயில் “உதயன்” பத்திரிகையை திரு.ஆ.கிருபாகரன் அவர்கள் தொடர்ந்து அன்பளிப்பாக வழங்கிவருகிறார். அதே போன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட “தமிழ்நாதம்” பத்திரிகையையும் அந்நிறுவனத்தினர் அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். மாதம்தோறும் வெளிவரும் “ஞானச்சுடர்” பத்திரிகைக்கான வருடச்சந்தாவை திரு.க.மகேந்திரன் அவர்கள் வழங்கியுள்ளார்கள். அத்துடன் இவ்வாண்டு வல்வை வரலாற்று ஆவணக்காப்பகர் திரு.ந.நகுலசிகாமணி அவர்கள், திரு.சவா.இராஜேந்திரன், திரு.தர்மலிங்கம் ஆகியோர் தமது வெளியீடு, ஆக்கம் என்ற வகையில் நூல்களை வழங்கியுள்ளனர். இவற்றுக்கு மேலாக மாணவர்கள் தமது பிறந்தநாள் பரிசாக நூலக நூல்களைக் கொள்வனவு செய்வதற்காக நா.ஜதுர்ஷா ரூ. 1000ஃஸ்ரீ, ஞா.ரம்யா ரூ. 500ஃஸ்ரீ, ப.மதுமதி ரூ.500ஃஸ்ரீ, பி.ஜெயந்தா ரூ.300ஃஸ்ரீ, சி.கோமளா ரூ.300ஃஸ்ரீஇ சி.சுகன்யா ரூ. 250ஃஸ்ரீவும், க.தரணியா, செ.தயாளினி, பு.நிரோஜினி, வி.சர்மியா ஆகியோர் தலா ரூ. 200ஃஸ்ரீ வீதமும் அ.பிருந்தா, சி.சுயந்தினி, ரா.சஞ்சீவன் ஆகியோர் நூல் ஒவ்வொன்றையும் வாங்கி வழங்கியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
18. மேலும் நூல் நிலையத்தில் ஒரு கணனியும் கணனி அறையும் அமைய வேண்டும் என்ற ஒழுங்குக்கமைய வுயளம குழசஉந ழn னுளையளவநச ஆயயெபநஅநவெ வழங்கிய ரூ.120இ000ஃஸ்ரீ வைப் பயன்படுத்தி கண்ணாடியால் அடைக்கப்பட்ட அறையை அமைத்து நூலகத்திற்கென ஒரு கணனியை அமைத்து நூலகம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
19. இவ்வாறு நூலகம் ஒழுங்கமைக்கப்பட்ட பின்னர் வடமராட்சி வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ரஞ்சி குட்டித்தம்பி அவர்களால் 01-02-2012 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு நூலக ஆசிரியை திருமதி சிவாஜினி திலகநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் சிறந்த நூலக சேவை நடைபெற்றுவருகின்றது. எனினும் எதிர்காலத்தில் மேலும் நூல்கள், தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டு விருத்தி செய்யப்பட வேண்டியது நூலகத்திற்கான அவசியமாகவுள்ளது. இதற்குரிய வேண்டுதலை வடமாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் கோரியுள்ளோம்.
20.
21. விஞ்ஞான ஆய்வு கூடம்
22. எமது பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை கண்ணாடி யன்னல்களால் அமைக்கப்பட்டுள்ளமையால் பாதுகாப்பற்றதாக அமைந்துள்ளது. அத்துடன் இதனை அமைத்துத்தந்த ருNஐஊநுகு நிறுவனத்தினர் அதற்குரிய தளபாடங்களையோ உபகரணங்களையோ வழங்கவில்லை. எனினும் விஞ்ஞான ஆய்வு கூடத்தை இயங்க வைக்கும் வகையில் பாடசாலைத் தளபாடங்களை பயன்படுத்துவதுடன் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவியினை வேண்டியபோது வுயளம கழசஉந ழn னுளையளவநச ஆயயெபநஅநவெ நிறுவனத்தினர் ரூ.135440ஃஸ்ரீ வை வழங்கியமையால் ஆய்வுகூடம் பயன்படக் கூடிய வகையில் உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளோம். அத்துடன் ஆய்வு கூடத்திற்கான உட்புறமாக கிறில் அமைப்பதற்கான நிதியைக் கோரிய போது பன்முக வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் ரூபா 72750ஃஸ்ரீ ஒதுக்கீடு செய்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் அவ்வேலைகளை நிறைவு செய்யவுள்ளோம். இவ்வகையில் உபகரணங்கள் கொள்வனவிற்காக நிதி உதவி வழங்கிய வுயளம கழசஉந ழn னுளையளவநச ஆயயெபநஅநவெ நிறுவனத்தினருக்கும் கிறில் அமைப்பதற்கான நிதியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராஜா அவர்களுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான தளபாடங்களை வழங்குமாறு வலயக்கல்விப் பணிப்பாளரூடாக மாகாணக் கல்விப்பணிப்பாளரிடம் கோரியுள்ளோம். எதிர்காலத்தில் அவையும் கிடைக்கப்பெறும் போது விஞ்ஞான ஆய்வு கூடம் முழுமைபெற்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பயன்படும் என எதிர்பார்க்கின்றேன். விஞ்ஞான ஆய்வு கூடத்தை வளப்படுத்தும் வகையில் எமது பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியையும் பகுதித் தலைவருமாகிய திருமதி.ந.திருநாவுக்கரசு அவர்கள் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு ஒரு ஊயள குக்கரையும் சிலின்டர் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவருக்கு எமது உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
23.
24. விளையாட்டு நிகழ்வுகள்
25. இவ்வாண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி 25-02-2012 அன்று தீருவில் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு எமது பாடசாலையின் பழைய மாணவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பொறியியல் பேராசிரியர் திரு.சபா.இராஜேந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வடமராட்சி கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.ச.செல்வக்குமரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். இம்முறை ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்தியிலிருந்தும், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி நெடியகாட்டில் இருந்தும் ஆரம்பித்து பாடசாலை எல்லை வரை நடைபெற்றமை சிறப்பான அம்சமாகும். விளையாட்டுப் போட்டியின் போது மாணவர்களின் ஜிம்னாஸ்ரிக் நிகழ்வுகளும் மாணவிகளின் உடற்பயிற்சி நிகழ்வுகளும் பலராலும் பாராட்டப்பட்டது. இல்ல விளையாட்டுப் போட்டிக்கான நிதி அனுசரணையை பழைய மாணவர் சங்கமும், வல்வை ஒன்றியம், ஓய்வு பெற்ற நில அளவையாளர் திரு.கதிர்காமத்தம்பி விமலதாஸ் கேசவன் ஞாபகார்த்தமாக திரு.சி.கணேசலிங்கம் திரு.ச.ஞானேஸ்வரராஜா ஆகியோர் வழங்கியிருந்தனர் அத்துடன் விளையாட்டுப் போட்டிக்கான வெற்றிக் கிண்ணங்கள் பெரியது -03, நடுத்தரமானது – 04, சிறியது – 15ஐ திருமதி ஜெகன் கயல்விழி அவர்கள் வழங்கியிருந்தார்கள். ரவிச்சந்திரன் ரதீஸ்வரன் மரதன் ஓட்டத்திற்காக 6 வெற்றிக்கிண்ணங்களை வழங்கியிருந்தார். திரு பால்ராஜ் அவர்கள் வெற்றிக்கிண்ணத்திற்காக ரூ 1500வை வழங்கியிருந்தார். பெற்றோருக்கான கொட்டகையினை ஆதிசக்தி விளையாட்டுக் கழகமும், ஆதிசக்தி கடற்றொழிலாளர் சங்கமும் அமைத்துத் தந்தார்கள். அத்துடன் பெற்றோர் கொட்டகைக்கான கதிரையினை தீருவில் விளையாட்டுக் கழகமும் அலுவலகத்திற்கான கொட்டகைக்கு திரு ராசகுமார் அவர்களும் வாடகையின்றி வழங்கியிருந்தனர். திரு.வெ.தயாபரன்(காட்டுப்புலம்) மரதன் ஓட்டப்போட்டியின் போதும் விளையாட்டுப் போட்டியின் போதும் வாகன சேவையை இலவசமாக வழங்கினார். இவர்களது பங்களிப்பு இல்ல விளையாட்டுப் போட்டியின் சிறப்பிற்கு ஏதுவாக அமைந்தது. இவர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
26.
27. இல்ல விளையாட்டுப் போட்டியினைத் தொடர்ந்து நடைபெற்ற பருத்தித்துறை கோட்ட மட்ட தடகளப் போட்டியில் செல்வி த.தாட்சாயினி, செல்வி உ.தனுஷா, செல்வன் ளு.மதன், செல்வன் சு.பிரசாந்தன், செல்வன் மு.வினோத், செல்வன் ஆ.மய+ரன் செல்வன் சு.லக்ஸ்மன், செல்வி உ.கரிஸ்மா 1ம், 2ம், 3ம், இடங்களையும் வலய மட்டத்தில் செல்வன் ளு.மதன் மு.வினோத், செல்வி உ. கரிஸ்மா ஆகியோர் 2ம், 3ம், இடங்களைப் பெற்று மாவட்ட மட்டத்தில் பங்கு பற்றியுள்ளார்கள். அத்துடன் 4ஒ100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் 15 வயதுப் பெண்கள் கோட்ட மட்டத்தில் 1ம் இடத்தினையும், வலய மட்டத்தில் 3ம் இடத்தினையும் பெற்று மாவட்ட மட்டத்தில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. பெரு விளையாட்டுப் போட்டிகளில் 15 வயதுப் பெண்கள் வலைப்பந்தாட்டம் கோட்ட மட்டத்திலும் கரப்பந்தாட்டம், கபடி, வலய மட்டத்திலும் பங்குபற்றியுள்ளார்கள். மேலும் 17 வயது ஆண்கள் உடற்பயிற்சிப் போட்டியில் வலய மட்டத்தில் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளதோடு கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்றவற்றிலும், பங்குபற்றியுள்ளார்கள்.
28. இவற்றினை விட யாஃதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்திய 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், போன்றவற்றில் 1ம் இடத்தினைப் பெற்றுள்ளார்கள். அத்துடன் கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் செல்வி க.தரணிகா 2ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
29. இவ்வகையில் எமது பாடசாலைக்கென ஒரு விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில் வாரத்தில் இரு நாட்கள் கடமையாற்றும் விளையாட்டுத் துறை ஆசிரியை திருமதி அ.பாஸ்கரன் அவர்களின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் தமது இயலுமை வெளிப்படுத்தியமையினால் ஆசிரியரும் மாணவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
30.
31. இணையத்தள வசதிகள்
32. மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்காக கணனிப் பாவனையை அதிகரிக்க வேண்டும் என்ற செயற்பாட்டில் எமது கணனி அறையில் 10 கணனிகள், மாணவர்களின் செயற்பாட்டிற்காக பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைக்காக பாடசாலைக்கு கேபிள் லைன் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திய வேளை இலண்டனில் வசித்து வரும் திரு.ளு.ராஜேந்திரா அவர்கள் தனது சொந்த நிதியில் மாணவர்கள் இணையத் தளவசதிகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளார். இவ்வகையில் தற்போது கணனி அறை, அலுவலகம், நூலகம், ஓடியோ வீடியோ அறை ஆகியவற்றில் இணையத்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அதற்குரிய கட்டணத்தினையும் செலுத்த அவரே முன் வந்துள்ளார். இவ்வகையில் இணையத்தள வசதியினை ஏற்படுத்தி தந்த திரு.ளு.ராஜேந்திரா அவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
33. பாடசாலைக்கான இணையத்தளம் ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய செயற்பாடுகளை திரு சீ.சாரூபன் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார். அதற்குரிய வேலைகள் நிறைவடைந்ததும் பாடசாலையின் சகல பதிவுகளையும் உலகலாவிய ரீதியில் பாhத்து மகிழ வாய்ப்பு ஏற்படும். இந் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் திரு சீ.சாரூபன் அவர்களுக்கும் அவரது உதவியாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
34.

35. தேசிய உணவு தினம்
36. இந்த வருடம் தேசிய உணவுத் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சின் ஆரம்ப நிகழ்விற்காக எமது பாடசாலை தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தினம் எமது பாடசாலையில் 19-01-2012 தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் எமது பாடசாலைக்கு கௌரவ கல்வி அமைச்சர் திரு.பந்துல குணவர்த்தன அவர்கள் கௌரவ பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு நாமல் ராஜபக்ச அவர்கள் வடமாகாண கௌரவ ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்;து சிறப்பித்ததுடன் வடமாகாணத்தின் கல்விப்புலத்தை சேர்ந்த உயர்கல்வி அதிகாரிகள், வடமராட்சி வலய அதிபர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்தமை பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. இந்நிகழ்வினை முன்னிட்டு கல்வி அமைச்சினால் எமது பாடசாலையில் கணித அறை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டதுடன் குறிப்பிடத்தககளவான உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு அமைக்கப்பட்ட கணித அறை எமது மாணவர்களின் கணித அறிவு மேம்பாட்டுக்கு உதவுவதாக அமைகிறது. அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பாடசாலைக்கு பியானோ ஒன்றும் வழங்கப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வினை முன்னிட்டு வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் வசதியீனத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்கள்-51, பெண்கள்-26 பாதணிகள் வழங்கப்பட்டது. இவ்வகையில் அனைத்து செயற்பாட்டையும் நெறிப்படுத்திய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்கள், கல்வி அதிகாரிகள் அனைவரது சேவையும் பாராட்டுதற்குரியதாகும்.
37. ஒரு பானைத்திட்டம்
38. இத்திடத்தின் கீழ் எமது பாடசாலைக்கு வழங்கப்படும் நிதியுதவி தொடாந்து வழங்கப்படுகின்றது. இதன் மூலம் உணவு வழங்கப்படும் ஒவ்வொரு நாட்களும் ரூபா 400ஃஸ்ரீ வழங்கப்படுகின்றது. இதன் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை தரமாக வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிதியுதவியினை வழங்கும் இங்கிலாந்தில் வாழும் வைத்திய கலாநிதி தான் முத்துவேல் அவர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எமது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
39.
40. மன்றங்கள்.
41. மாணவர்களின் ஆளுமைத் திறனை வெளிப்படுத்துவதற்கு வசதியாக மன்றங்கள் அமைக்கபட்டு இருபிரிவுகளாக(6 – 8, 9–11) நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு புதன்கிழமையும் இம்மன்றங்கள் செயற்பட்டு வருகின்றது. மாதத்தில் முதல் புதன்கிழமை தமிழ் மன்றமும், இரண்டாவது புதன்கிழமை கணித விஞ்ஞான மன்றமும், மூன்றாவது புதன்கிழமை ஆங்கில மன்றமும், நான்காவது புதன்கிழமை சமூச- சுகாதார மன்றமும் செயற்படுவதுடன் ஒவ்வொர வெள்ளிக்கிழமையும் இந்து மன்றமும் செயற்பட்டு வருகின்றது. இவ்வாண்டு தமிழ் மன்றம் “எழினி” என்ற கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டு தமது செயற்பாட்டை உயர்வுபடுத்தியுள்ளது. இச்சஞ்சிகைக்கான மதிப்பீட்டுரையை யாஃசிதம்பராக் கல்லூரி ஆசிரியர் திரு.ளு.சிவனேஸ்வரன் அவர்கள் செய்து மாணவர்கள் முயற்சியை பெரிதும் பாராட்டினார்.
42. வல்வை ஒன்றியம்
43. வல்வை மக்களின் கல்வி சமூக அபிவிருத்திக்காக பணியாற்றி வரும் வல்வை ஒன்றியம் எமது பாடசாலையில் பணியாற்றி வரும் செல்வி யோ. சரண்ஜா அவர்களுக்கு மாதந்தோறும் ரூபா 4000ஃஸ்ரீ திரு சோ. பிறேமச்சந்திரன் அவர்களுக்கு மாதந்தோறும் ரூபா 2500ஃஸ்ரீ ம் ஊக்கிவிப்பு கொடுப்பனவாக வழங்கி பாடசாலையின் கல்விச் செயற்பாட்டிற்கு ஆதரவு வழங்கி வருவதுடன் இல்ல விளையாட்டுப் போட்டியின் போது ரூபா 10,000ஃஸ்ரீ வினை அனுசரனையாக வழங்கியமைக்காகவும் எனது உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்
44.
45. வுயளம குழசஉந ழn னுளையளவநச ஆயயெபநஅநவெ
46. எமது பாடசாலை சுனாமிக்கு உட்பட்டமை காரணமாக அதற்கான நிதி உதவியை வழங்கும் நோக்கில் எமது வேண்டுதலை ஏற்று மேற்படி நிறுவனம் இவ்வாண்டு பின்வரும் நோக்கங்களுக்கான நிதியினை வழங்கியிருந்தது.
47.
• விஞ்ஞான ஆய்வு கூட உபகரணம் – 135,440.00
• நூலகமும் கணனியும் கணனி அறையும் – 120,000.00
• ஓடியோ வீடியோ அறை வுஏஇ னுஏனு pடயலநச – 30,000.00
285,440.00
இந் நிதியினை வழங்கி பாடசாலைக் கல்விச் செயற்பாட்டிற்கு ஆதரவு நல்கியமைக்காக இவ் ஸ்தாபனத்தாருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழைய மாணவர் சங்கம்
பாடசாலையின் கல்விச் செயற்பாட்டில் பெருமளவு பங்கு கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் சீர் பெற நடைபெற நிதி அனுசரணையையும் ஆலோசனையையும் வழங்கி வரும் பழைய மாணவர் செயற்பாடு பாராட்டுதற்க்குரியதாகும். பழைய மாணவர் சங்கம் வருடந்தோறும் கால் கோள்விழா, இல்ல விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா ஆகியவற்றுக்கு நிதி அனுசரணை வழங்கிவருகின்றனர். இவ்வருடம் இதற்கு மேலாக கணனி அறை, யன்னல், தாவாரம் அமைத்தல், பாடசாலைக்கு பெயர்ப்பலகை, விளம்பரப்பலகை, ஆசிரியர் ஐn-ழுரவ பலகை, பாண்ட் அணிக்கு வேண்டிய மேலதிக உபகரணங்கள் ஆகியவற்றுக்கான நிதியினை வழங்கியதுடன் சென்ற ஆண்டு இறுதியில் எமது பாடசாலையில் இருந்து தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிக்குச் சென்ற மாணவனுக்கான போக்குவரத்துச் செலவு, காத்தவராயன் கூத்துப்போட்டியில் வலய, மாவட்ட போட்டியில் பங்குபற்றுவதற்கான செலவுகள் தரம் 1,2,10,11 ஆகிய வகுப்புக்களில் ஆங்கில மொழியை விருத்தி செய்வதற்கான வளவாளருக்கான கொடுப்பனவுகள் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் பங்கு பற்றுவதற்கான கொடுப்பனவுகள் என்ற வகையில் சென்ற பரிசளிப்பு விழாவில் இருந்து இன்று வரை ரூ.288042ஃஸ்ரீவை வழங்கியுள்ளனர். இவ்வாறு பாடசாலையுடன் அனைத்துச் செயற்பாட்டிற்கும் உறுதுணை புரிந்து செயற்பட்டு வரும் பழைய மாணவர் சங்கத்தினருக்கும் நிதியை வழங்கி வரும் இலண்டன் பழைய மாணவர் சங்கத்தினருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் பாடசாலை நிகழ்வுகளின் போது எமது வேண்டுதலை ஏற்று வாடகையின்றி பிளாஸ்ரிக் கதிரைகளை வழங்கி வரும் பழைய மாணவன் திரு.தி.நடனசிகாமணி அவர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
பாடசாலை அபிவிரத்திச் செயற்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பை எற்படுத்தும் அமைப்பான பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் சிறப்புடன் செயற்பட்டு வருகின்றது. உலக உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதுடன் சென்ற 04.09.2012 முதல் பால் வழங்கும் நடவடிக்கையையும் சிறப்பாக மேற் கொண்டு வருகின்றனர். அத்துடன் பாடசாலை விழாக் காலங்களில் தங்களது ஒத்துழைப்பையும் நல்கி வரும் அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாடசாலையின் தேவைகள்
எமது பாடசாலை தற்போது வளங்கள் பலவற்றை பெற்றுள்ள போதும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், இணைபாட விதான செயற்பாடுகள், ஆளுமை விருத்திகளை மேம்படுத்துவதற்கு பாடசாலையின் பௌதீக வளங்களை மேலும் மேம்படுத்த வேண்டியது தேவையானதும் அவசியமானதாகவும் அமைந்துள்ளது.
மாணவர்களின் செயற்பாட்டுத்திறனை மேம்படுத்துவதற்கு செயற்பாட்டு அறை அமைக்கப்படாமை முக்கிய குறைபாடாக உள்ளது.
மூன்று மாடிகளைக் கொண்டதாக திட்டமிடப்பட்ட எமது பாடசாலை நாட்டின் அசாதாரண சூழல் காரணமாக ஒரு மாடியுடன் நிறுத்தப்பட்டு விட்டது இந் நிலையில் தற்போது அழகியல் பாடங்களுக்கான அறைகள் இல்லாத நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குறை நிலையில் காணப்படும் இரண்டாவது மாடிக் கட்டடத்தை நிறைவு செய்து அழகியல் பாடம் ஏனைய தொழில் நுட்ப பாடங்களில் கற்பிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டியுள்ளது எனவே இவ் வேண்டுதலை வடமாகாண கல்வி அமைச்சின் கௌரவ செயலாளர் அவர்கள் நிறைவு செய்து தருவார்கள் என பாடசாலைச் சமூகம் எதிப்பார்க்கின்றது.
எமக்கு கட்டித்தரப்பட்டுள்ள இக்கூட்ட மண்டபம் திறந்த மண்டபமாக இருப்பதால் காகங்களின் தொல்லைகள் பெரும் இடர்பாடாக உள்ளது. எதிர்காலத்தில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடைக்கும் எனவும் பாடசாலைச் சமூகம் எதிர்பார்க்கின்றது.
இவ்வாறான பௌதீக வளங்கள் நிறைவடையும் போது எமது பெறுபேறுகளும் உயர்நிலையில் பேணப்பட வேண்டிய அவசியம் காணப்படுவதால் பெற்றோர் கல்வி தொடர்பான விழிப்புணர்வினைப் பெற்று பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டில் பூரண கவனமும் அக்கறையும் கொள்ள வேண்டுமென வேண்டி இவ்வறிக்கையை நிறைவு செய்கிறேன்.

ஆ.சிவநாதன்
அதிபர்
*********************************************************************************************************************

பரிசளிப்பு விழா – 2011 ஃ 2012
பரிசுக்குரியோர் விபரம்
பாடரீதியான பரிசுகள் :- 2011

இல பெயர் பாடங்கள் அனுசரணை
வழங்குவோர்
தரம் – 1
1 தனுஜா சுதாகரன் கணிதம், சுற்றாடல், சமயம், சிறப்புப்பரிசு

2 கஜேந்தினி குகதாஸ் தமிழ், கணிதம்
தரம் – 2
1 முருகவேல் விதுஷன் சுற்றாடல், சமயம், சிறப்புப்பரிசு
2 இந்திரதாஸ் மயூரதன் கணிதம்
3 சிவதேவி சண்முகராசா தமிழ்
4 கிருசியா ஆனந்தராசா கத்தோலிக்கத்திருமறை
தரம் – 3
1 பூவிகா சிவச்செல்வம் கணிதம், ஆங்கிலம், சிறப்புப்பரிசு பழைய
மாணவர்
சங்கம்
2 இராஜசங்கர் விதுசன் தமிழ், சுற்றாடல் , சிறப்புப்பரிசு
3 அனித்தா ஆறுமுகம் சமயம்
4 டொனாள்டொ அலன்சுபாஸ் கத்தோலிக்கத்திருமறை
தரம் – 4
1 உமாச்சந்திரன். ஜனனன் தமிழ், சுற்றாடல், சமயம்,ஆங்கிலம், சிறப்புப்பரிசு
2 குகராசா லக்ஷன் கணிதம்
தரம் – 5
1 பவிதா இரத்தினகுமார் ஆங்கிலம், தமிழ், சமயம், சுற்றாடல், சிறப்புப்பரிசு

2 வபிஷா வேலாயுதம் கணிதம்,
3 அனீந்திரன் ஜேம்ஸ்ரன் கத்தோலிக்கத்திருமறை
தரம் – 6
1 ரோஜா பிறேமச்சந்திரன் தமிழ், ஆங்கிலம், புவியியல், வாழ்.தே+குடியுரிமை, நடனம், வரலாறு, சுகாஃஉடற்.கல்வி, சிறப்புப்பரிசு திரு.கணேசலிங்கம் ரஞ்சித்குமார்
2 சாளினி மனோகர் சமயம், விஞ்ஞானம், சங்கீதம்
3 கனகராசா நிலவன் கணிதம், சித்திரம்
4 ஜெயதர்சினி ஜெயக்குமார் கணிதம், செ.மு.தொழில்நுட்பம்,
5 திருவருட்செல்வன் சானுஜன் கத்தோலிக்கத்திருமறை
தரம் – 7
1 அனுசியா ஆனந்தராசா சுகாஃஉடற்.கல்வி, பிர.தொழில்நுட்பம், வாழ்.தே+குடியுரிமை, புவியியல், வரலாறு, சங்கீதம், சிறப்புப்பரிசு
செல்வநாயகம் அம்பிகை ஞாபகார்த்த பரிசில் வழங்குபவர்
ளு.பிருதுவிராஜன்
2 மனோகர் சுதர்சன் சமயம், தமிழ், விஞ்ஞானம், சித்திரம்
3 பாலச்சந்திரன் பாஸ்கரன் ஆங்கிலம்
4 சாந்தினி சண்முகராசா கணிதம்
5 ஜோதிகா திலகேந்திரன் நடனம்
6 மரிய எபிசாயினி யூட்நிமால் கத்தோலிக்கத்திருமறை

-1-

தரம் – 8
1 தனுஷா உதயகுமார் சமயம், தமிழ், கணிதம், பிர.தொழில்நுட்பம், சுகாஃஉடற்.கல்வி, சங்கீதம், சிறப்புப்பரிசு
கதிர்காமத்தம்பி
தேவசிகாமணி ஞாபகார்த்த பரிசில்
வழங்குபவர்
திரு.க.விமலதாஸ்
2 செல்வராசா விதுஷன் வரலாறு, புவியியல், வாழ்.தே+குடியுரிமை, பிர.தொழில்நுட்பம்,
3 முத்துவேல் அன்பழகன் ஆங்கிலம், வாழ்.தே+குடியுரிமை
4 சர்வானந்தவேல் துஸ்யந்தன் விஞ்ஞானம்
5 தாட்சாயினி தர்மகுமார் நடனம்
6 தங்கவேலாயுதம் பிரதீப் சித்திரம்
7 அன்ரனீஸ் உதயகுமாரன் கத்தோலிக்கத்திருமறை
தரம் – 9
1 சுபாசினி இந்திரதாஸ் சமயம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், வாழ்.தே+குடியுரிமை,
செ.மு.தொழில்நுட்பம், சுகாஃஉடற்.கல்வி, சங்கீதம் ,சிறப்புப்பரிசு திரு.ச.ஞானேஸ்வரராஜா

2 மகாலட்சுமி சிவபவன் ஆங்கிலம், நடனம்
3 சந்திரகுமார் பவனராஜ் சித்திரம்
தரம் – 10(யூடீ)
1 கேசவி கணேசலிங்கம் சமயம், ஆங்கிலம், கணிதம், வரலாறு, வணிகக்கல்வி, சங்கீதம், ஐஊவுஇ சிறப்புப்பரிசு திரு.இ.மயூதரன்
2 பிரியங்கா கிருஸ்ணகுமார் தமிழ், விஞ்ஞானம்
3 பிரியங்கா பாலச்சந்திரன் வரலாறு
4 தர்சினி சிவசோதி புவியியல்
5 ஆனந்தமயில் ஆனந்தராஜ் சித்திரம்
6 ஜதுர்ஷா நாகராசா நடனம்
7 ஜெயந்தா பிறேமச்சந்திரன் சுகாஃஉடற்.கல்வி
8 கோமளா சித்திவிநாயகம் கடல்வளம்
9 அன்ரனீஸ் உதயகுமாரன் றொனாட் கத்தோலிக்கத்திருமறை
தரம் – 11(யூடீ)
1 ஜோதிகா பிறேமச்சந்திரன் சமயம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, வணிகக்கல்வி, நடனம், கடல்வளம், சிறப்புப்பரிசு.
கேசவன்
ஞாபகார்த்த பரிசில்
வழங்குபவர்
சி.கணேசலிங்கம்

2 லாவண்ணியா கனகராசா ஆங்கிலம், சங்கீதம், ஐஊவு
3 தமிழ்நிலா இந்திரதாஸ் புவியியல்
4 குகராசா திவாகர் சித்திரம்

-2-

பரிசளிப்பு விழா – 2011 ஃ 2012
2012ம் ஆண்டுக்குரிய சிறப்புப் பரிசுகள்
விபரம்

ளு தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை (2011ம் ஆண்டுப்பரீட்சை) காலம் சென்ற கௌரவ
பாராளுமன்ற உறுப்பினர்கள்
அமரர்.சிவநேசன்,
அமரர்.ரவிராஜ்
ஞாபகார்த்த பரிசில்
வுழங்குபவர்
திரு.அ.மாதொருபாகன்
1 வபிஷா வேலாயுதம் (153 புள்ளி) நிலை 933 (கேடயம்)
ளு க.பொ.த (சாஃத) பரீட்சை (2011ம் ஆண்டுப்பரீட்சை)
1 ஜோதிகா பிறேமச்சந்திரன் (8யு 1ஊ ) சிறப்புப்பரிசு
2 லாவண்ணியா கனகராசா
3 தமிழ்நிலா இந்திரதாஸ்
4 பாபு திலீபன்
5 சிறீதரன் சிறீகிருஸ்ணன்
6 சிவனேஸ்வரன் அச்சுதன்
7 பத்மநாதன் கஜந்தன்
8 குகராசா திவாகர்
9 இந்திரலிங்கம் யுகதீபன்
10 இரத்தினகுமார் லக்ஸ்மன்
11 கணேசலிங்கம் அருண்
12 யசிந்தா சங்கரசிவா
ளு நூலக பாவனை
1 தரம் 6 பவிதா இரத்தினகுமார் , கவிநிலா இராசசேகரம், பிரியதர்சினி பாலச்சந்திரன்
2 தரம் 7 ரோஜா பிறேமச்சந்திரன்
3 தரம் 8 பாலசிங்கம் சரத்குமார், பாலச்சந்திரன் பாஸ்கரன், மனோகர் சுதர்சன், ஜோதிகா திலகேந்திரன்
4 தரம் 9 தனுஷா உதயகுமார்
5 தரம் 10 சுதர்சினி விஜியகுமார்
6 தரம் 11யு கேசவி கணேசலிங்கம், கேமலதா சண்முகராசா
7 தரம் 11 டீ ஜதுர்ஷா நாகராசா
ளு மெய்வல்லுநர் போட்டி 2012 வலய மட்டம்
1 சுப்பிரமணியம் மதன் -நீளம் பாய்தல் 2ம் இடம் (தரம் -11, 17 வயது.பிரி)
2 சிறீதரன் வினோத் – தட்டு எறிதல் – 3ம் இடம், 800அ ஓட்டம் – 2ம் இடம் மாவட்டமட்டம் ( தரம் – 11,19 வய.பிரி)
3 ஹரிஸ்மா உதயகுமார் 100அ ஓட்டம் 3ம் இடம் ( தரம் – 5 ,11 வய.பிரி)
4 4 ஒ 100 ஓட்டம் 3ம் இடம் (15 வயதுப்பிரிவு ) – தனுஷா உதயகுமார் , தரணியா கனகராசா, ஜெயவதனா ரவி, அனுசியா ஆனந்தராசா, தர்சிகா பூலோகசிங்கம்
5 தரணியா கனகராசா – கதிரவேற்பிள்ளை ஞாபகார்த்தமாக நடந்த தனி சதுரங்கப்போட்டியில் 2ம் இடம் (15 வயதுப்பிரிவு )
6 யாஃவீரகத்திப்பிள்ளை ம.வி. தொண்டைமானாறு நூற்றாண்டு விழாவில் பாடசாலைக்கிடையிலான போட்டியில் 17வயதுப் பெண்கள் கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம் 1ம் இடம்

ளு உடற்பயிற்சிப் போட்டி 19 வயது ஆண்கள் – 3ம் இடம்

ளு வலயமட்டம் தமிழ் மொழித்தினப் போட்டி – (காத்தவராயன் கூத்து) 1ம் இடம்
1 சந்திரகுமார் பவனராஜ்
2 ஆனந்தமயில் ஆனந்தராஜ்
3 லோவிந்தராசா லோவிந்தன்
4 கோமளா சித்திவிநாயகம்

-3-
5 சுபாசினி இந்திரதாஸ்
6 சுதர்சினி விஜயகுமார்
7 மகாலட்சுமி சிவபவன்
8 தனுஷா உதயகுமார்
9 சாளினி மனோகர்
10 ரோஜா பிறேமச்சந்திரன்
11 வர்சினி சௌந்தரராஜன்
12 பிருந்தா இராசேந்திரம்
13 லக்சியா மதியழகன்
ளு திருக்குறள் மனனப் போட்டி வலயம்
சுபாசினி இந்திரதாஸ் – 5ம் இடம்

ளு வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற கோலப் போட்டி
1 சிவானந்தன் சிவசுதன் – 1ம் இடம்
2 சந்திரகுமார் பவனராஜ் – 2ம் இடம்

ளு சாரணர் 2012 ( 2012 குருளைச்சாரணர் விளையாட்டுப் போட்டியில் மாவட்;ட மட்ட பரிசுக்குரியவர்கள்)
1 அருளானந்தம் அஜய் -நீளம் பாய்தல் 3ம் இடம்
2 அருளானந்தம் அஜய் -குறிபார்த்து எறிதல் 1ம் இடம்
ளு 2012 சாரணர் தாச்சிப் போட்டியில் மாவட்ட மட்டம் 2ம் இடம்
1 ரசீந்திரன் பிரசாந்
2 செல்வராசா விதுஷன்
3 பிறேமதாஸ் சதுர்ஜன்
4 அன்ரனீஸ் உதயகுமார் ரொனிஸ்ரன்
5 பகீரதன் மதுராஜ்
6 சந்திரகுமார் பவனராஜ்
7 ஸ்ரீதரன் அஜித்குமார்
8 பாலேந்திரராசா அருள்நாதன்
9 அமரகுலசிங்கம் கஜன்
10 சிவகுமார் நிதர்ஷன்
ளு நுடுசுவுஊ (நுபெடiளா டுயபெரயபந சுநளழரசஉந யுனெ வுசயiniபெ உநவெசந)
குகதாஸ் கஜேந்தினி (றசவைவநn நுஒயஅ உசநனவை pயளள)
ளு சுவரொட்டிப் போட்டி (கல்வி, ஒழுக்கம், விளையாட்டு) அனுசரணை
வழங்குபவர் சபா.இராஜேந்திரன்

1 வள்ளுவன் இல்லம் (நீலம்)
2 இளங்கோ இல்லம் (பச்சை)
3 கம்பன் இல்லம் (சிவப்பு

ளு வரவொழுங்கு
தரம் 1 ராஜ்ஜீவன் சஜீவன்
தரம் 2 சாந்தினி இராசசேகரம்
தரம் 3 கருணைரத்தினம் ஹரிஸ் , ஷர்மிகா விஜயகுமார்
தரம் 4 இராஜசங்கர் விதுஷன்
தரம் 5 தாரணி கிருஷ்ணகுமார்
தரம் 6 கவிநிலா இராசசேகரம்
தரம் 7 ரோஜா பிறேமச்சந்திரன்
தரம் 8 ஞானேஸ்வரராசா கிருஷன்
தரம் 9 கலைச்செல்வி கிருஷ்ணகுமார்
தரம் 10 சந்திரகுமார் பவனராஜ்
தரம் 11யு திருஞானசுந்தரம் குருபரன், பிரியங்கா பாலச்சந்திரன், பிரியங்கா கிருஷ்ணகுமார்
தரம் 11டீ பாலசிங்கம் சிலம்பரசன், பாலச்சந்திரன் விஜய்
ளு செல்வன் சிதம்பரநாதன் அனுஜன் – முன்மாதிரிச் செயற்பாட்டிற்கான பரிசில்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *