வல்வை மகளிர் மகா வித்தியாலாயத்தின் புதிய அதிபராக துவாளி உடுப்பிட்டியைச் சேர்ந்த செல்வி இராஜலஷ்மி சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் (இலங்கை அதிபர் சேவை தரம் -2 ), வடமராட்சி கல்விப் பணிப்பாளரால் வழக்கப்பட்ட நியமனத்தினத் தொடர்ந்து இன்று பதவி ஏற்றுள்ளார்.
வல்வை மகளிர் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்கள் சார்பில் மாலை அணிவித்து சம்ராதயபூர்வமான வரவேற்பு நடைபெற்றமையும் இங்கு குறிபிடத்தக்கது.
இவர் இதுவரை காலமும் வடமராட்சி ஆசிரியார் கல்வி முகமையாளராக கடமையாற்றி வந்துள்ளார். அத்துடன் இவர் வல்வை சிவகுரு வித்தியாலயத்திலும் , வல்வை சிதம்பரா கல்லூரியிலும் தமிழ் பாட நூல் ஆசிரியராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,